தூத்துக்குடி – டிச -31,2023
Newz – webteam
தூத்துக்குடி மாவட்டம் புளியங்குடியை சார்ந்த வாலிபர் வெட்டிக் கொலை: பொதுமக்கள் சாலை மறியலிலால் பரபரப்பு
இன்று காலை திருநெல்வேலி மாவட்டம் சாய்பாப கோவில் அமைந்துள்ள மலை அருகில் தூத்துக்குடி மாவட்டம், புளியங்குடியை சார்ந்த ஷ்யாம் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் இந்த கொலை எந்த காரணத்திற்க்காக நடைபெற்றுள்ளது என்று போலீசார் விசாரனையை தொடங்கியுள்ளனர் காதல் பிரச்சினையா அலலது கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா அல்லது முன்விரோதமா என்ற கோணத்தில் போலீசார் விசாரனை பெய்து வருகின்றனர்
வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று காலையில் , ரெட்டியார்பட்டி சாய்பாபா கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை வழிமறித்த மர்மகும்பல் அவரை கண் மண் தெரியாமல் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். ரத்தவெள்ளத்தில் அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு கூடினர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வாலிபர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அந்த வாலிபர் செய்துங்கநல்லூர் அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஷ்யாம் 32என்பது தெரியவந்தது. அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீயாய் பரவியது. கொலையுண்ட ஷ்யாம் வசிக்கும் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஊர் மக்கள், உறவினர்கள் ஷ்யாமை வெட்டிக் கொன்றவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டடனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சவார்த்தை நடத்தினர்.
வாலிபர் ஷ்யாம் கொலையை கண்டித்து ஸ்ரீவைகுண்டம் முதல் கருங்குளம் வரை தொடர்ந்து நீண்ட நேரம் சாலை மறியலில் ஈடுபட்டதால் புளியங்குளம் வழியாக எந்த வாகனமும் திருநெல்வேலி நோக்கி செல்ல முடியவில்லை. அதனால் அந்த வழியாக திருநெல்வேலிக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் அரசு, தனியார் பேருந்துகள் ஸ்ரீவைகுண்டம், பேட்மா நகரம், வாகைக்குளம் வழியாக பைபாஸ் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர். மேலும் நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வாகனங்களும் அந்த வழியாக வர இயலவில்லை.
இந்த கொலை வழக்கு தொடர்பாக திருநெல்வேலி போலீஸ் கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் உதவி மேலப்பாளையம் உதவி கமிஷனர் சதீஸ்குமார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார் ஷ்யாமை கொலை செய்த நபர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கொலை சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது……
0 Comments