திருநெல்வேலி – ஜன -04,2024
Newz – webteam
திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து வசதிகளும் உடைய நவீன முறையில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆயுதப்படை நிர்வாக அலுவலகம் திறப்பு விழா.
திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை நிர்வாக அலுவலக புதிய கட்டிடத்தை இன்று தமிழக முதல்வர், காணொளி மூலம் திறந்து வைத்தார்.
புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆயுதப்படை நிர்வாக அலுவலக கட்டிடத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்., குத்து விளக்கேற்றி வைத்து மாவட்ட ஆயுதப்படை நிர்வாக அலுவலக கட்டிட சுற்றுபுறங்களை பார்வையிட்டு காவல் துறையினருக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்ட ஆயுதப்படை நிர்வாக அலுவலகம் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளதாகவும், ஆயுத வைப்பு அறை, கோப்பு அறை, கணினி அறை, ஆண் காவலர்கள், பெண் காவலர்களுக்கென்று தனி ஓய்வறைகள், சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டும், தீயணைப்பு மற்றும் ஜெனரேட்டர் வசதிகள் உட்பட ரூபாய் 756 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது எனவும் நவீன முறையில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை, துணை காவல் கண்காணிப்பாளர், சுப்பிரமணியன் அவர்கள், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி , தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஷ் , உதவி ஆய்வாளர்கள், காவல்துறையினர் மாவட்ட ஆயுதப்படை நிர்வாக அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
0 Comments