நாகபட்டினம் – ஜன -06,2024
Newz – webteam
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள அந்த, அந்த காவல் நிலையங்களில் செல்போன்கள் காணாமல் போனதாக பல்வேறு நபர்கள் கொடுத்த புகார்களுக்கு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரூபாய் 15,52,500/- மதிப்பிலான 100 செல்போன்கள் மீட்கப்பட்டது. இவ்வாறு மீட்கப்பட்ட செல்போன்களை நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் செல்போன்களின் உரிமையாளர்களை வரவழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா ஹர்ஷ் சிங், இ,கா,ப அ உரியவர்களிடம் ஒப்படைத்தார் மேலும் பொது மக்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினார்
0 Comments