சென்னை – ஜன -13,2024
Newz – k.niyaz
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவல் ஆணையாளர் அலுவலகம் மற்றும் இராஜரத்தினம் மைதானம் ஆகிய இடங்களில் காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினருக்காக நடத்தப்பட்ட பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகம்சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப அவரது மனைவி ஷில்பம் கபூர் அவர்களுடன் இன்று காலை வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சென்னை பெருநகர காவல் துறை, மத்திய குற்றப்பிரிவு சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழாவில் கலந்து கொண்டு, பொங்கல் பாரம்பரிய உடைகளுடன் பங்கேற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடினார். மேலும், பொங்கல் விழாவையொட்டி, நடைபெற்ற ரங்கோலி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற ஆண் மற்றும் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் முனைவர் P.K.செந்தில்குமாரி, இ.கா.ப., மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர்கள் .N.S.நிஷா, இ.கா.ப., ஆரோக்கியம், கீதாஞ்சலி (சைபர் கிரைம்), முனைவர் G.வனிதா (CAWC), கூடுதல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
எழும்பூர், இராஜரத்தினம் மைதானம்
பின்னர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப அவரது மனைவி ஷில்பம் கபூர் அவர்களுடன் இன்று காலை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில், சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை-1 சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு, ஆயுதப்படை காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்.
மேலும், மைதானத்தில் கிராமிய கலை நயத்துடன் அமைக்கப்பட்டிருந்த
கோயில், நாற்று நடுதல், மண்பானை செய்தல், பொங்கல் வைத்து சாமி
கும்பிடுதல் போன்ற குடில்கள், கிளி ஜோசியம், கரும்பு விற்பனை கடைகள் மற்றும் மாட்டு தொழுவம் ஆகிய அரங்குகளை காவல் ஆணையாளர் ரசித்து பார்வையிட்டார்.பின்னர் தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு, காவல் அதிகாரிகள்,
ஆளிநர்கள், அவரது குடும்பத்தினருக்கான ரங்கோலி கோலப்போட்டி, கயிறு
இழுத்தல், உறியடித்தல், லக்கி கார்னர், நடனப் போட்டி, சிறுவர்களுக்கான ஓட்ட
பந்தயம், சாக்கு ஓட்டம், போன்ற விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து கண்டுகளித்தார்.
மேலும் ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது
குழந்தைகளின் பரதநாட்டியம், சிலம்பம், கிராமிய நடனம், குழந்தைகள்
நடனம், பறை இசை நடனம் ஆகிய கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார்.
மேலும் மல்லர் கம்பம் சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்து, பொங்கல் விழா
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற காவல் ஆளிநர்கள் மற்றும்
அவரதுகுடும்பத்தினருக்கு கோப்பைகள், கலைநிகழ்ச்சிகளில்
பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கினார்.
இறுதியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காவல்
அதிகாரிகள் மற்றும் காவலர் குடும்பத்தினருக்கு பொங்கல் திருநாள்
வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள்
சுதாகர், இ.கா.ப., (போக்குவரத்து), தலைமையக கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி சரட்கர், இ.கா.ப.,
.மததிய குற்றப்பிரிவு இணை கமிஷனர் செந்தில்குமாரி இ.கா.ப
தலைமையிட காவல் இணை ஆணையாளர்ள் கயல்விழி,இ.கா.ப., தர்மராஜன், இ.கா.ப.,
கிழக்கு மண்டல போக்குவரத்து துணை ஆணையர் தேவராணி, இ.கா.ப., மகேஷ்குமார்,இ.கா.ப. போக்குவரத்து தெற்கு காவல் துணை ஆணையாளர்கள், காவல்அதிகாரிகள், காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினர் ஆகியோர் திரளாக கலந்துகொண்டனர்.
0 Comments