சென்னை – ஜன -24,2024
Newz – webteam
தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முன்னிலையில், குற்றங்களை குறைப்பதற்காக 3 செயலிகள் பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவுவதற்காக பந்தம் திட்டத்தை துவக்கி
வைத்தார்.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், இ.கா.ப. இன்று வேப்பேரி. காவல் ஆணையரகத்தில், நடந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர். இ.கா.ப. முன்னிலையில், சென்னை பெருநகர காவலில் குற்றங்களை குறைப்பதற்கும், குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும். ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு பருந்து மற்றும் நிவாரணம்” ஆகிய 3 செயலிகளின் இயக்கத்தையும், பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவுவதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ள “பந்தம்” என்ற புதிய திட்டத்தையும் துவக்கி வைத்தார்.
ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு
சென்னை பெருநகரம் மற்றும் இதர இடங்களில் காணாமல் போன மற்றும் திருடு போன வாகனங்களை கண்டுபிடிக்கவும். இவ்வாகனங்களை குற்ற நபர்கள் பயன்படுத்தி, சங்கிலி பறிப்பு, செல்போன் பறிப்பு, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்கு பயன்படுத்துவதை தடுக்கவும். ரூ.1.81 கோடி செலவில் ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
திருடு போன வாகனங்களின் பதிவெண் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் இதர வாகனங்களின் விவரங்கள் IVMS ல் பதிவேற்றம் செய்யப்பட்டு, சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 25 இடங்களில், IVMS உள்ளடக்கிய 75 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் நெருக்கடியான இடங்களில், கூடுதலாக 50 நகரும் கேமராக்களும் தேவைக்கேற்ப நிறுத்தப்படும். இதனால், மேற்படி கேமராக்களில் பதிவாகும் வாகனங்கள் மற்றும் சந்தேக வாகனங்களின் பதிவு எண்களை கொண்டு அந்த வாகனங்களின் உண்மையான விவரங்கள் காண்பிக்கப்படும்போது. அவை திருடு போன வாகனமா அல்லது உண்மையான வாகன பதிவெண்ணா என எச்சரிக்கை செய்யும்.
மேலும், திருடப்பட்ட அல்லது காணாமல் போன வாகனம் என கண்டுபிடிக்கப்பட்டதும். கண்காணிப்பு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்தியை அறிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கொலை, கொள்ளை, செயின் மற்றும் செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட வாகனங்களின் பதிவு எண்கள் கண்டறியப்பட்டால். IVMS மூலம் உடனடி எச்சரிக்கைகளை உருவாக்கும்.இந்த IVMS உதவியுடன், காணாமல் போன மற்றும் திருடு போன வாகனங்கள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு. உரியவர்களிடம் ஒப்படைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருந்து செயலி :
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட 104 காவல்
நிலையங்களில் பராமரிக்கப்படும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும்
சரித்திர பதிவேடு அல்லாத குற்றவாளிகளின் விவரங்களை பதிவு செய்யும்வசதி, உயர்தர தேடல் தகவல்கள். புதுப்பிக்கப்பட்ட விவரக்குறிப்பு
பராமரித்தல், குற்றத்தின் அடிப்படையில் அறிக்கைகள்மேம்படுத்தப்பட்ட 24 மணி நேரமும் கண்காணிக்கும் தளமாக பருந்து செயலிசெயல்படுகிறது. இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக, குற்றம்
சாட்டப்பட்டவர் காவலில் வைக்கப்படும்போதும். ஜாமீன் மனு தாக்கல்
செய்யும்பொழுதும். ஜாமீன் வழங்கப்படும்போதும், சிறையிலிருந்து
விடுவிக்கப்படும்போதும் உடனடியாக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
செய்தியை இச்செயலி அனுப்புகிறது.
குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய சரித்திர பதிவேடுகுற்றவாளிகளை பற்றி, பருந்து செயலி மூலம் எச்சரிக்கை செய்திஅனுப்பவும், நடவடிக்கை அறிக்கையை கோரவும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு உதவுகிறது. இதனால் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தொடர்புடைய வழக்குகளைப் விரைவாக கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உதவுகிறது. எனவே, ரூ.25 லட்சம் செலவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள பருந்து செயலி சென்னை பெருநகரக் காவலுக்குட்பட்ட எல்லையில் குற்றங்களை தடுத்து, சென்னையை மேலும் பாதுகாப்பான நகரமாக மாற்ற பெரும் பங்காற்றும்.
பந்தம்சென்னை பெருநகரில் வசிக்கும் மூத்த குடிமக்களான 75 வயதுக்கு மேற்பட்டவர்கள், தனியாக வசிப்பவர்கள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது பந்தம் செயலி. வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகளால் தனித்து வாழும் முதியோர்கள், வாரிசு இல்லாத முதியோர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் என தனியாக வசிக்கும் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, காவல்துறை மூலம் அவர்களை கண்காணிக்கவும், அவசர தேவைகளுக்கு
உதவுவதற்கும், மருத்துவமனை அழைத்து செல்லவும் பல உதவிகளை செய்யவும் பந்தம் செயலி உதவும். இதனால் உதவிக்கரம் கிடைக்காத மூத்த குடிமக்களுக்கு பேரூதவி கிடைப்பதுடன், அவர்களது உயிரை காப்பாற்றவும் உதவும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், அவசர தேவைகளுக்கு மூத்த குடிமக்கள் காவல்துறையின் கட்டணமில்லா உதவி கைபேசி எண்.94999 57575ஐ அழைக்கலாம்
.
நிவாரணம் செயலி:
சென்னை பெருநகர காவல்துறையில், காவல் நிலையங்கள், காவல் அதிகாரிகள், இணையதளம் மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்களை ஒருங்கிணைத்து அவற்றை கண்காணிக்கவும், விசாரணை முறைகள், நடவடிக்கைகள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து பொதுமக்கள் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் நிவாரணம் செயலி தொடங்கப்பட்டுள்ளது. இச்செயலி மூலம், பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் விவரங்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், முடிவுகள் குறித்து காவல் அதிகாரிகள் தெரிந்து கொள்ளவும், தாமதமாகும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் இச்செயலி உதவுகிறது.
முக்கியமாக, மூத்த குடிமக்களின் புகார் மனுக்கள் கண்டறிந்து அவற்றின் மீது சிறப்பு கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க உதவும். மேலும், பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் நிலைகளை அறிந்து கொள்ள பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்பவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணைய தளம், பிளாக்செயின் Giggso India Private Ltd (Giggso Inc., USA நிறுவனம்) ஆல் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்
0 Comments