தூத்துக்குடி – ஜன -27,2024
Newz – webteam
இன்று தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்ற 75 வது🇮🇳 குடியரசு தின விழாவில், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 79 காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி இ.ஆ.ப. சிறந்த பணிக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன்
சாத்தான்குளம் டிஎஸ்பி அருள்
ஆய்வாளர்கள் :
அன்னராஜ்
மாரியம்மாள்
தர்மர் முரளிதரன்
பத்மாவதி
அனிதா திருநாவுக்கரசு
மயிலேறும் பெருமாள்
தூத்துக்குடி இயங்கும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் கலாலெட்சுமி
காவல்துறை அமைச்சுப் பணி அலுவலக கண்காணிப்பாளர் காவேரி
உட்பட காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், முதல் நிலை காவலர்கள், காவலர்கள், அமைச்சுப் பணி உதவியாளர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 79 பேருக்கு வழங்கப்பட்டது.
பாராட்டுச் சான்றிதழ் பெற்ற அனைவருக்கும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டுகளை தெரிவித்தார்.
0 Comments