திருநெல்வேலி – ஜன -27,2024
Newz – webteam
தமிழகத்தில் சிறந்த மூன்றாவது காவல் நிலையமாக நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை காவல் நிலையம் தேர்வு.
குற்ற வழக்குகளில் துப்பு துலக்குதல், குற்றவாளிகளைக் கைது செய்தல், தண்டனை பெற்றுத் தருதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு சொத்துகளை மீட்டுக் கொடுத்தல், பொதுமக்களிடம் நன்மதிப்புடன் நடந்து கொள்ளுதல், காவல் நிலையத்தில் சுகாதாரம் – தூய்மையைப் பேணிக்காத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் 2022-ம்ஆண்டின் சிறந்த காவல் நிலையத்தில் நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை காவல் நிலையம் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இதற்கான தமிழக முதல்வர் கோப்பையை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடமிருந்து காவல் ஆய்வாளர் வாசிவம் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் இன்று நெல்லை மாநகர காவல் ஆணையர் முனைவர் மூர்த்தி இ.கா.ப.,பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு நேரில் சென்று காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் அனைவரையும் பாராட்டி வெகுமதி அளித்தார்கள். மேலும் சிறப்புடன் செயல்பட அறிவுரை வழங்கினார்.மேலும அவர்களுடன் குழு புகைபடம் எடுத்துகொண்டார்
உடன் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர்(மேற்கு) கீதா , காவல் உதவி ஆணையர்கள் திரு.மணிமாறன் அவர்கள் (நுண்ணறிவு பிரிவு), .பிரதீப் பாளை சரகம் .சதீஸ் குமார் மேலப்பாளையம் சரகம் காவல் ஆய்வாளர்கள் பாஸ்கரன் வாசிவம் அவர்கள் மற்றும் பாளையங்கோட்டை காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
0 Comments