திருப்பத்தூர் – பிப் -05,2024
Newz – webteam
திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல் துறையின் தெரிவுநிலையை மேம்படுத்தவும், பெண்கள் உள்ளிட்ட குடிமக்களிடையே அதிக நம்பிக்கையையும், நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் முயற்சியாக, திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட இரண்டு சக்கர வாகனங்களை ரோந்து பணி காவலர்களுக்கு வழங்கியுள்ளது.
மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள் 24,மணிநேரமும் ரோந்து காவலை மேற்கொண்டு சமூகவிரோதிகளின் குற்ற செயலுக்கு அப்பாவி மக்கள் பாதிப்படையாமல் பாதுகாப்பை உறுதி செய்வார்கள். மேலும் சுற்றுகாவலர்கள் மாநில காவல் கட்டுபாட்டு அறையிலிருந்து பெறப்படும் 100 அவசர அழைப்புகளுக்கு உடனடியாக சம்பவ இடம் செல்கின்றனாரா என்பதை குறித்து ஜிபிஎஸ் வாயிலாக கண்காணிப்பதால் அழைப்புகளுக்கு பதிலளிக்கும் நேரத்தை முழுவதுமாக மேம்படுத்த வாய்ப்பாக அமையும். மேற்படி சுற்றுகாவலர்களின் செயல்பாடுகளை GPS கருவி வாயிலாக மாவட்ட கட்டுபாட்டு அறையிலிருந்தும், சம்பந்தப்பட்ட கண்காணிக்கப்படுவார்கள்.
முகாம் அலுவலகங்களில் இருந்தும்
பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை உறுதி செய்வதையே மாவட்ட காவல்துறை தலையாயப் பணியாகக் கொண்டுள்ளது. இதற்காக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்களை உள்ளடக்கிய அர்ப்பணிப்புள்ள பெண்கள் பீட் மகளீர் காவல் நிலைய ஆய்வாளர்களின் கண்காணிப்பிலும் மற்றும் 3 பீட் அமைப்பு ஆகியவை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. 2024 ஆம் ஆண்டில், ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகன கண்காணிப்பைத் தவிர. மாவட்டம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு காமிராக்களை பொருத்துவதை அதிகரிப்பது, அதிக புற காவல் நிலையங்களை துவக்குவது ஆகியவையும் திட்டமிடப்பட்டுள்ளது
. 100 அவசர அழைப்புகளுக்கு மாநில அளவில் திருப்பத்தூர் மாவட்டம் 07.40 நிமிடங்களில் சிறந்த பதிலளிப்பு நேரத்தைக் கொண்டுள்ளது என்பதும், அழைப்பாளர்களில் 92.6% பேர் காவல்துறையின் பதிலளிப்பு சிறப்பானது மதிப்பிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments