தூத்துக்குடி – பிப் -05,2024
Newz – webteam
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான உடற்தகுதி தேர்வு சம்பந்தமாக காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் அறிவுரை கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2023ம் ஆண்டிற்கான காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கு கடந்த 10.12.2023 அன்று எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்று தகுதியானவர்களுக்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் உடற்தகுதி தேர்வு நாளை (06.02.2024) முதல் வருகின்ற 10.02.2024 வரை தூத்துக்குடி தருவை மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது. மேற்படி நடைபெற உள்ள உடற்தகுதி தேர்வு சம்பந்தமாக காவல்துறையினர் மற்றும் காவல் அமைச்சுப் பணி அலுவலர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் தூத்துக்குடி அருணாச்சலம் மாணிக்கவேல் மஹாலில் இன்று அறிவுரை கூட்டம் நடைபெற்றது.
இந்த உடற்தகுதி தேர்வில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் . கார்த்திகேயன் மேற்பார்வையில் 5 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 15 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் மற்றும் காவல் அமைச்சுப் பணியாளர்கள் என மோத்தம் 250 பேர் உடற்தகுதி தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இக்கூட்டத்தில் காவலர் உடற்தகுதி தேர்வு குறித்து காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் என்னென்ன பணிகள், எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அறிவுரைகள் வழங்கினார்.
இதில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா இ.கா.ப, காவல் துணை கண்காணிப்பாளர்கள் கன்னியாகுமரி நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சுரேஷ்குமார், ராஜபாளையம் 11வது பட்டாலியன் உதவி தளவாய் சரோஜா, தீயணைப்புத்துறை தூத்துக்குடி மாவட்ட உதவி அதிகாரி ராஜூ உட்பட காவல்துறை அதிகாரிகள் உட்பட காவல்துறையினர், மாவட்ட காவல்துறை அலுவலக அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரிகள், அலுவலக கண்காணிப்பாளர் உட்பட அமைச்சுப்பணி அலுவர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments