கோயம்புத்தூர் – பிப் -14,2023
Newz – webteam
ஆனைமலை காவல் நிலைய பகுதியில் உள்ள சோதனை சாவடி மற்றும் பொள்ளாச்சி காவல் நிலைய பகுதியில் உள்ள பேருந்து நிலையங்களை ஆய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் …
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்,இ.கா.ப.,ஆனைமலை காவல் நிலைய பகுதியில் உள்ள மீனாட்சிபுரம் சோதனை சாவடியை ஆய்வு மேற்கொண்டு இன்னும் சோதனை சாவடி திறம்பட செயல்படவும், அங்கு நடைபெறும் வாகனம் தணிக்கையை சீர்செய்வதற்கு ஏற்ப சோதனை சாவடி இடத்தை அமைப்பதற்கும்,
மேலும் சிசிடிவி கேமராக்கள் சோதனை சாவடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் நிறுவ வேண்டும் என்றும், வாகன தணிக்கையை ஒழுங்குபடுத்தி திறமையாக செயல்படுத்தி குற்றங்கள் நடவாமல் தடுக்க வேண்டும் என்றும் வால்பாறை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆனைமலை காவல் ஆய்வாளருக்கு அறிவுறுத்தினார்.
பின்பு பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையத்தை பார்வையிட்டு பழுதடைந்த காவல் உதவி மையத்தை நகராட்சியுடன் கலந்து ஆலோசித்து அருகில் தகுந்த இடத்திற்கு மாற்றி அமைத்து புதுப்பொலிவுடன் சீரமைக்க அறிவுரை வழங்கினார். மேலும் சிசிடிவி கேமராக்களை பேருந்து நிலையத்திலும்
அதன் சுற்றுப்பகுதியிலும் அதிகளவில் நிறுவ வேண்டும் என்றும், பின்பு புதிய பேருந்து நிலையத்தை பார்வையிட்டு அங்கு செயல்படும் காவல் உதவி மையத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், 24 மணி நேரமும் காவல் உதவி மையத்தில் காவலர்களை பணியமர்த்த வேண்டும் என்றும், இரவு நேரங்களில் பயணிகளை தவிர்த்து சந்தேகப்படும்படியான நபர்களை கண்காணித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவும்,
மேலும் குற்றம் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் அங்கு பழுதடைந்து சிசிடிவி கேமராக்களை சரி செய்து அதிகளவில் சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும் என்றும், சிசிடிவி கேமராக்களை காவல் உதவி மையத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும் என்றும் பொள்ளாச்சி துணைக் காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுரை வழங்கினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்டத்தில் நடைபெறும் குற்ற செயல்களை தடுக்கும் வகையிலும், கண்காணிக்கும் வகையிலும் மாவட்டம் முழுவதும் சிசிடிவி கேமராக்களை நிறுவி வருகிறார். பொதுமக்கள் அனைவரும் தங்களது குறைகளை தயங்காமல் காவல்துறையை அணுகி தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
0 Comments