திருநெல்வேலி – பிப் -15,2024
Newz – webteam
இருதயத்தில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டு உயிர் பிழைத்த சிறுவன் மின்னல் வேக்த்தில் செயல்பட்ட திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவர்கள்
குடியரசு தினமான -26 ஜனவரி 2024 அன்று, 11 வயது சிறுவன், தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த திரு. சந்திரன் அவர்களின் மகன் ஸ்டெர்லின்டானிராஜா காலை 10.30 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது தற்செயலாக அவரது மார்பின் இடது பக்கத்தில் கத்திரிக்கோல் குத்தப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு, அவர் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு TAEI வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
கத்தரிக்கோல் முனை அவரது இதயத்தின் வலது பக்கத்தில் வலது வென்ட்ரிக்கிள் ஊடுருவி இருந்தது. இதனால் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டது. அப்போது பணியில் இருந்த அவசர சிகிச்சை மருத்துவ அலுவலர் மருத்துவர் முத்துராஜன் துரிதமாக செயல்பட்டு இருதய மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை பிரிவு துறைத்தலைவர் மருத்துவர் சஞ்சீவ் பாண்டியன் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
இருதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணரின் ஆலோசனை உடனே பெறப்பட்டு மருத்துவமனை முதல்வர் மருத்துமனை டீன் ரேவதி பாலன் வழிகாட்டுதலின் பேரில் இருதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சஞ்சீவ் பாண்டியன், துறையின் உதவி பேராசிரியர் மருத்துவர் கவிதா,, மயக்கவியல் நிபுணர் மருத்துவர் அமுதா ராணி, மருத்துவர் , மகாராஜன்,
மற்றும் செவிலியர் மகாலட்சுமி இந்த குழுக்களின் மூலமாக அரை மணி நேரத்தில் இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.
சிறுவன் நன்றாக குணமடைந்து 14 நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான்
இதயத்தில் ஊடுருவும் காயங்கள் மிக அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. உலகளாவிய உயிர்வாழ்வு விகிதம் 19 – 32.6 % மட்டுமே.
இங்கு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்ட
அரை மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட குழுக்களின் வேகமான கண்காணிப்பு காரணமாக இருதயத்தில் ஏற்பட்ட கத்திக்குத்து காயத்தை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடித்துள்ளனர் உயிரை காப்பாற்றிய சிறுவனின் பெற்றோர்கள் முதல்வர் ரேவதி பாலன் மற்றும் மருத்துவ குழுவினருக்கு நன்றி் தெரிவித்தனர்
0 Comments