திருநெல்வேலி – பிப் -16,2024
Newz – webteam
தனிப்பிரிவு மற்றும் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் வைத்து திறன் மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்.
ல்லை மாநகர காவல் ஆணையர் முனைவர் பா.மூர்த்தி, இ.கா.ப.,தலைமையில் திருநெல்வேலி சரகத்தில் உள்ள மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகரத்தை சேர்ந்த தனிப்பிரிவு மற்றும் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு திறன் மேம்பாட்டு குறித்து சிறப்பு வகுப்பு 16.02.2024 மற்றும் 17.02.2024 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
இதில் இன்று 16.02.2024 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் வைத்து திறன் மேம்பாடு குறித்த வகுப்பு நடைபெற்றது.
நிகழ்வில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) .G.S.அனிதா, அவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினராக, ஓய்வு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தன் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியின் காவல் துறையினர் மனஅழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது, நல்ல உணவு பொருட்களை உட்கொள்வது மற்றும் உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைக்க உதவும் என பல அறிவுரைகளை வழங்கி, பின் காவல்துறையினரின் நிறை, குறைகளை கேட்டறிந்தார்
0 Comments