கோயம்புத்தூர் – பிப் -22,2024
Newz – webteam
குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான தேசிய அளவிலான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் …
தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறை,UNICEF மற்றும் அமிர்தா பல்கலைக்கழகம் இணைந்து இன்று (22.02.2024) அமிர்த பல்கலைக்கழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் குழந்தை பாதுகாப்பு பிரிவில் உள்ள குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள், தேசிய அளவில் உள்ள குழந்தை பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் அமிர்தா கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்,இ.கா.ப., கலந்து கொண்டு கோவை மாவட்ட காவல்துறையினரின் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற திட்டத்தின் மூலம் கடந்த கல்வி ஆண்டில் சுமார் 1300 பள்ளிகளில் சுமார் 2,11,000 மாணவ மாணவிகளுக்கு மாவட்ட காவல்துறையினர் மூலம் பாலியல் குற்றங்கள் சம்மந்தமான விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டது என்றும்,இது பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்றும் ,இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில் பள்ளிக்கூடம் 2.0 என்ற மேம்படுத்தப்பட்ட திட்டத்தினை தொடங்கி இதன் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான விழிப்புணர்வு மற்றும் அதிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் யுக்திகளை அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என்றுதிட்டத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறியும்,
இத்திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கண்டறியப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை பற்றியும் , அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்றும் விளக்கினார். மேலும் சமுதாயத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல்துறையினர், ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பங்குகளை பற்றியும் எடுத்துக் கூறினார்.
குழந்தைகளுக்கு சமூக வலைதளம் மூலம் ஏற்படும் தீமைகள், பாலியல் ரீதியான தொந்தரவுகள் பற்றி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளிடம் எடுத்துரைத்து குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும் பாலியல் ரீதியான குற்றங்கள் குறைவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் எனவும், குற்றங்களை குறைத்து வருங்கால சந்ததியினரை பாதுகாப்பது நமது கடமை எனவும் அறிவுறுத்தி சிறப்புரையாற்றினார்.
0 Comments