தென்காசி – மே,28,2024
Newz – webteam
பசிபிக் ஆசியன் யோகா போட்டியில் தங்க பதக்கம் வென்ற பெண் தலைமை காவலரின் மகனுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு
தாய்லாந்தில் நடைபெற்ற 3 வது பசிபிக் ஆசியன் யோகா போட்டியில் புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் சைலா அவர்களின் மகன் முகில்வர்ஷன் (14) என்பவர் போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில் சிறுவனை பாராட்டும் விதமாக இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் முகில் வர்ஷனுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி மேலும் பல பதக்கங்களை வெல்ல தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்..
0 Comments