கன்னியாகுமரி -ஜீலை 08,2024
Newz – webteam
முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை…. மீனவ இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை தொடங்கி வைத்து பேசிய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில், மீனவ இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா நிகழ்ச்சி கன்னியாகுமரியில் வைத்து இன்று நடைபெற்றது.
தமிழக அரசின் திட்டத்தின் படி கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் இப்பயிற்சியானது மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அவர்கள்
இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பற்படையில் தேர்வு செய்யப்பட ஏதுவாக வழங்கப்படுகிறது. இரண்டு கட்ட பயிற்சிகள் நிறைவுற்ற நிலையில் மூன்றாவது கட்ட பயிற்சி இன்று தொடங்கி 90 நாட்கள் நடைபெறும்.
நிகழ்ச்சியில் பேசிய காவல் கண்காணிப்பாளர், மீனவ இளைஞர்கள் கடலோர காவல்படை, இந்திய கப்பற்படை, தமிழக காவல் துறை மற்றும் இதர துறையின் அரசு வேலைகளின் தேவை என்ன என்பதையும் அதை அடைவதற்காக எவ்வாறு அவர்களை தயார்படுத்துவது என்ற வழிமுறைகளையும் அவர்களுக்கு எடுத்துரைத்து ,
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்றும் அவர்களுக்கு படிப்பதற்கான உக்தியையும் விளக்கினார்கள். மேலும் அரசு, நீங்கள் படித்து வேலைவாய்ப்பினை பெற உணவு, தங்கும் இடத்துடன் இலவசமாக பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்துள்ளது. இனிவரும் காலங்களில் அரசு வேலைகளில் நீங்கள் அதிக எண்ணிக்கையில் சேர தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் ஊக்கபடுத்தினார்கள்
இந்நிகழ்ச்சியில் கடலோர பாதுகாப்பு குழும காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் , கன்னியாகுமரி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் அவர்கள், கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் நவீன் மற்றும் கன்னியாகுமரி மீன்வளதுறை உதவி இயக்குனர் தீபா ஆகியோர் கலந்து கொண்டனர்
0 Comments