திருநெல்வேலி -ஜீலை -08,2024
Newz – webteam
மருத்துவமனை தகவல் மேலாண்மைத் திட்டம், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனை மேலாண்மைத் திட்ட (HMIS 3.0) செயலாக்க ஆய்வுக்கூட்டம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் தலைமையில் இன்று நடை பெற்றது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையானது, 2400 படுக்கை வசதிகளும் கூடிய தென் தமிழகத்தின் பிரதான அரசு மருத்துவமனையாகும்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையானது. மருத்துவமனை தகவல் மேலாண்மைத் திட்டம் மூலம் அனைத்து நோயாளிகளின் சேவைகளையும் வழங்குவதில் தமிழகத்திலேயே முதல் இடத்தில் உள்ளது.மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பதிவு செய்தல் உள் நோயாளிகள் அனுமதி சீட்டு வழங்குதல், மருத்துவர்கள் மருந்து பரிந்துரை செய்வது. இரத்தப் பரிசோதனை செய்ய பதிவு செய்தல்,இரத்தப் பரிசோதனை முடிவுகள் வழங்குதல் ஆகிய அனைத்து சேவைகளும் முழுவதும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன.
வெளிநோயாளிகளுக்கு பரிந்துரைக்கப் படும் மருந்துகள் அனைத்தும் கணிப்பொறி மூலம் மட்டுமே பரிந்துரைக்கப் படுகிறது. இரத்தப் பரிசோதனை செய்யப்படும் அதே நேரத்தில் மருத்துவர்கள் வலைத் தளத்தில் இரத்தப் பரிசோதனை முடிவுகளைக் காணலாம். இதனால் தேவையற்ற கால தாமதமானது தவிர்க்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சைகளை விரைந்து வழங்க முடியும்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தமிழக அளவில் இந்த திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி கொண்டு வருவதால், இந்த திட்டத்தின் மேம்படுத்தப் பட்ட வடிவத்தை(HMIS 3.0) முதலில் அமல் படுத்திடும் வாய்ப்பு அளிக்கப் பட்டிருக்கிறது. அனைத்து பயன்பாடுகளும் பரிசோதிக்க பட்ட பின்பு தமிழகம் முழுவதும் இந்த திட்டம்விரிவாக்கம் செய்யப் பட இருக்கிறது. தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் IAS தலைமையில் நடைபெற்ற மருத்துவமனை மேலாண்மைத் திட்ட (HMIS 3.0) செயலாக்க ஆய்வுக்கூட்டத்தில் இது தொடர்பாக மருத்துவர்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டன. மேலும், திட்டம் செயல் படுத்தப் படுவதை நேரில் ஆய்வு செய்தார்
திருநெல்வேலிஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவமனை மேலாண்மைத் திட்டம் (HMIS 3.0) சிறப்பாக செயல் படுத்தப் பட்டு வருவதற்காக கல்லூரி முதல்வர் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.புதிய மருத்துவமனை மேலாண்மைத் திட்டத்தின் (HMIS 3.0) சிறப்பு அம்சங்கள்நோயாளிகள் செயலி மூலம் அவர்களாவே மருத்துவமனையில் பதிவு செய்தல்,
ஆய்வக முடிவுகள் பார்வையிடுதல், மருத்துவரின் பரிந்துரை பார்வையிடுதல், மருந்துகள்விவரம் பார்வையிடுதல் போன்றவற்றை தங்கள் தொலைபேசியிலே பெற முடியும். ஆய்வக முடிவுகள் கணிப்பொறியில் பதிவு
செய்யப்பட்டதும் நோயாளிகளின் பதிவு செய்யப்பட்ட தொலை பேசி எண்ணுக்கு தானியங்கி முறையில் உடனுக்குடன் செல்லும் வசதியும் இதில் உள்ளது
மருத்துவர்களும் எல்லா நோயாளிகளின் ஆய்வக முடிவுகளையும் உடனுக்குடன் பார்வையிட முடியும். மருந்துவரின் பரிந்துரை, மருந்துகள் விவரம் போன்றவையும் நோயாளிகளுக்கு அச்சிட்டு வழங்கப் பட இருக்கிறது.
0 Comments