போலிசாரின்‌ மன அழுத்தத்தை போக்க  மகிழ்ச்சி திட்டம் திருவாரூரில் தொடக்கம் டிஜிபி சங்கர் ஜிவால் துவக்கிவைத்தார்…


திருவாரூர் – ஆகஸ்ட் -02,2024

Newz -webteam



காவல்துறையினரின் மன அழுத்தத்தை போக்கும் “மகிழ்ச்சி” திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர்  சென்னையில் பணிபுரியும் காவலர்களின் மனநல மேம்பாட்டிற்காக 2022 ஆம் ஆண்டு “மகிழ்ச்சி” என்ற திட்டத்திற்கு ரூபாய் 53 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அத்திட்டம் சிறப்பாக நடைப்பெற்றது.

இதில் 1000 காவலர்கள் பயனடைந்தனர். இதனைத் தொடர்ந்து தென் மண்டலத்தில் பணிபுரியும் காவலர் நலனுக்காக ரூபாய் 30 இலட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மதுரையில், 15.02.2024 அன்று தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் காவலர் நலனில் அக்கறை கொண்டு இதுபோன்ற புதுமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


சென்னை, மதுரைக்கு அடுத்தபடியாக மத்திய மண்டல காவலர்களுக்கான மகிழ்ச்சி திட்டம்” ட்டம்” தொடக்க விழா இன்று (02.08.2024) திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால், இ.கா.ப.கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.


முன்னதாக, மனநல ஆலோசனை குறித்தான கையேடு வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக காவலர்கள் மனநல ஆலோசனை மையம் மூலமாக மீண்டு வந்தது குறித்து ஒவ்வொருவராக எடுத்துரைத்து காவல்துறைக்குநன்றி தெரிவித்துக்கொண்டனர்.இதனை தொடர்ந்து, மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கிருஷ்ணன், காவல்துறை தலைவர், (நலன்) நஜ்முல் ஹோடா, இ.கா.ப., மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், இ.கா.ப., திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி. காமினி, இ.கா.ப., காவல்துறை துணைத்தலைவர், தஞ்சாவூர் சரகம் ஜியாவுல் ஹக் இ.கா.ப., தமிழ்நாடு “மகிழ்ச்சி” திட்ட மாநில ஒருங்கிணைப்பாளரும் மனநல நிபுணருமான டாக்டர் ராமசுப்பிரமணியன், மத்திய பல்கலைக்கழக பேராசிரியரும், மகிழ்ச்சி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர்  வித்யா, மத்திய பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் திருமுருகன் மற்றும் சென்னை “மகிழ்ச்சி” திட்ட மனநல மருத்துவ ஆலோசகர் டாக்டர் T. பிரபாகர் ஆகியோர் “மகிழ்ச்சி திட்டம்” குறித்து எடுத்துரைத்து பேசினர்கள்.


தொடக்க விழாவில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின்
துணைவேந்தர் பேராசிரியர் M. கிருஷ்ணன், “நலம் விதைப்போம்” என்ற
சிறப்பு திட்டத்தை அறிவித்தார். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்,
காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும், இதில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி, மொழிப் பயிற்சி,சுகாதாரம் மற்றும் குடும்ப சமூகத்திற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகியவை அடங்கும். மத்திய மண்டலத்தில் உள்ள காவலர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை சேவைகளை வழங்க 24X7 Helpline எண் வழங்கப்படும்.


இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு
காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால்,
இ.கா.ப.  பேசுகையில், சென்னையில் காவலர் “மகிழ்ச்சி திட்டம்”
துவங்கியபோது, 1000 பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு, 600 பேருக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 100 நபர்கள் முழுமையாககுணமடைந்துள்ளனர்.

இந்த திட்டத்தின்கீழ், மனநல ஆலோசனைக்குஅவர்களாகவே முன்வந்து கலந்துகொள்ளஊக்கப்படுத்தப்படுகிறார்கள்.இத்திட்டத்தின் மூலம் ஏராளமான காவல்துறையினர் பயன்பெற்றுள்ளனர்
என்பது, சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்ற “மகிழ்ச்சி” திட்டத்தின்
மூலம் கண்கூடாக தெரிய வந்துள்ளது.

இதுபோன்ற திட்டங்களின் மூலம்
ஒரு சிலர் பயன்பெற்றாலே ஈடில்லா மகிழ்ச்சி கிடைக்கிறது. மன அழுத்தம்
என்பது தன்னை மட்டுமின்றி, தனது குடும்பத்தினரையும் பாதிக்கும்
என்பதால் இதுபோன்ற திட்டங்கள் மூலம் மன அழுத்தத்தில் உள்ள
காவல்துறையினருக்கு நிரந்தர தீர்வு பெற முயற்சி எடுத்து வருகிறோம்
எனத் தெரிவித்தார்.


இந்த “மகிழ்ச்சி திட்டம்” சுமார் ஒரு வருட காலத்திற்கு நடைபெறும்.
இதில் மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்ட காவல் துறையினர்
மற்றும் திருச்சி மாநகர காவல்துறையினரும் கலந்து கொண்டு
பயன்பெறுவார்கள்.


Like it? Share with your friends!

admin user

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

நிருபர்கள் தேவை
Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube and Vimeo Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format