விருதுநகர் – ஆகஸ்ட் -02,2024
Newz -webteam
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், தாணிப்பாறை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழா தினத்தை முன்னிட்டு வரும் 03.08.2024 முதல் 05.08.2024ம் தேதி வரை கோவிலுக்கு வரும் பக்தர்கள் தாணிப்பாறையில் இருந்து சதுரகிரி மலையேறுவதற்கு அதிகாலை 06.00 மணி முதல் மாலை 12.00 மணி வரை மட்டுமே அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மலை ஏறும் பக்தர்களை பாதுகாக்கும் பொருட்டு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .கா.பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் 03 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 11 காவல் துணைக்கண்காணிப்பாளர்கள், 25 காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் 1420 காவல் ஆளினர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் காவல் பணிபுரிய விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
03.08.2024 முதல் 05.08.2024ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பொழிவு இருக்கும் பட்சத்தில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலை ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் பக்தர்களுக்கு இரவு நேரங்களில் கீழே தங்குவதற்கு போதிய இட வசதி இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் வராமல் மலையேறும் நேரத்தை அணுசரித்து வர பக்தர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குற்ற சம்பவங்கள் நடைபெறமால் இருக்க CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் குற்ற சம்பவங்களை கண்காணிக்க “குற்றத்தடுப்பு காவலர்கள்” பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.
தாணிப்பாறை அடிவாரத்தில் பொது மக்கள் வசதிக்காக 24 மணிநேரமும்
செயல்படும் காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது
மேற்கண்ட காவல்துறை அறிவிப்புகளையும், விதிமுறைகளையும் பின்பற்றி பக்தர்கள் காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு விருதுநகர் மாவட்ட காவல்துறை
கண்காணிப்பாளர் அலுவலகம் மூலமாக பொதுமக்களை கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments