கன்னியாகுமரி -ஆகஸ்ட் -13,2024
Newz -webteam
பெண்கள் சைபர் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்வது, பாதிக்கப்பட்டால் காவல்துறையை எவ்வாறு அணுகுவது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்குறும்பட போட்டியின் நோக்கம்…. முன்னோட்ட நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சு
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.சுந்தரவதனம் IPS தலைமையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் “பெண்களுக்கான இணையவெளி பாதுகாப்பு” என்ற தலைப்பில் குறும்பட போட்டி நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் இன்று(13.08.2024) பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் வைத்து குறும்பட போட்டியில் கலந்துகொள்ள இருப்பவர்களுக்கு பயன்பெறும் வகையில் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் குறும்படம் கருத்துள்ளதாகவும், நகைச்சுவை உணர்வுடன், பொது சிந்தனையோடும் அமைந்திருக்க வேண்டும் எனவும் அரசியல், சாதி, மதம் சார்ந்து பதிவுகள் இடம்பெறக்கூடாது, மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் இருக்க வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் சைபர் குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி, அவ்வாறு சிக்கிக் கொண்டால் காவல்துறையை எவ்வாறு பயமின்றி அணுகுவது போன்ற விழிப்புணர்வையும் தைரியத்தையும் ஏற்படுத்துவதே இக்குறும்பட போட்டியின் நோக்கமாகும் என்று கூறினார்
பெண்களின் அந்தரங்க புகைப்படங்களையோ, மார்ஃபிங் புகைப்படங்களையோ சமூக வலைதளங்களில் போட்டு மிரட்டினால் உடனடியாக சைபர் காவல் நிலையத்திலோ, அனைத்து மகளிர் காவல் நிலையத்திலோ புகார் அளிக்கலாம் என்றும் கூறினார்
மேலும் இக்குறும்படம் ரீல்ஸ், சமர்ப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 31 ஆகும். சிறந்த படைப்புக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்படுவார்கள்.
இதில் உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.யாங்சென் டோமா பூட்டியா,சைபர் குற்ற பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன்தாஸ்,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மதியழகன் மற்றும் சைபர் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் சொர்ணராணி தமிழ்நாடு Startup லிருந்து ராகுல் மற்றும் ஜிஜின் துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments