திருச்சி -ஆகஸ்ட் -09,2024
Newz -webteam
கோயம்புத்தூரில் நடந்த 49வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் இரண்டாம் இடம்
49வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் போட்டி -2024 (ரைபிள் & பிஸ்டல்) 15.07.2024 முதல் 26.07.2024 ம் தேதி வரை கோயம்புத்தூர் ரைபிள் கிளப்பில் நடைபெற்றது.
இந்த போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 1800 போட்டியளார்கள் கலந்துகொண்டனர். 10 மீட்டர் ஏர் ரைபிள் சுடும் பிரிவில் 650 போட்டியாளார்கள் கலந்துகொண்டனர். இதில் 45 வயது முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள் 60 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் கலந்து கொண்ட திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், IPS., 10 மீட்டர் ஏர் ரைபிள் சுடும் பிரிவில் திருச்சி ரைபிள் கிளப் சார்பாக கலந்துகொண்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வெள்ளி பதக்கத்தை கைப்பற்றி இரண்டாவது இடம் பிடித்தார்.
மேற்படி துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு 09.08.2024 ம் தேதி திருச்சி ரைபிள் கிளப் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. மொத்தம் திருச்சி ரைபிள் கிளப் சார்பாக 7 தங்கம், 15 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் உட்பட 32 பதக்கங்களை கைப்பற்றினர்.
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், IPS., அவர்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, IPS., தலைமையில் சான்றிதழும் பதக்கமும் வழங்கி பாராட்டினார். மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், IPS., தென் மண்டல அளவில் நடைபெற உள்ள துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
0 Comments