கன்னியாகுமரி -ஆகஸ்ட் -10,2024
Newz -webteam
கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மறுபுனரமைப்பு செய்யப்பட்ட காவலர்களின் குழந்தைகளுக்கான காப்பகத்தை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர்கள் அலுவல் நிமித்தமாக வெளியே செல்லும் போது காவலர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்காக கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான காப்பகத்தை மறுபுனரமைப்பு செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார்
உத்தரவின் பேரில் ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான காப்பகம் மறுபுனரமைக்கப்பட்டு மின்சார அடுப்பு, குழந்தைகளுக்கு தொலைக்காட்சி வசதிகளுடன் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .சுந்தரவதனம் IPS திறந்து வைத்தார்
இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கியும் அனைத்து குழந்தைகளுக்கும் விளையாட்டுப் பொருள்கள் கொடுத்தும் உற்சாகப்படுத்தினார்.
மேலும் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து ஆயுதப்படை காவலர்களுக்கு நடைபெற்ற கவாத்தை பார்வையிட்டு காவலர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள். மேலும் காவலர் குடியிருப்பில் பார்வையிட்ட அவர், அதன் குறைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்து அதனை சரி செய்ய உத்தரவிட்டார்
இதில் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் செந்தாமரைக் கண்ணன் மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுஜாதா ஆகியோர் உடனிருந்தனர் .
0 Comments