வேலூர் -அக் -02,2024
Newz -webteam
வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பல்வேறு இடங்களில் மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர், விற்பவர் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் அடிப்படையில் இன்று
வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையிலான போலீசார் பீஞ்சமந்தை மலைப்பகுதியில் சோதனை மேற்கொண்டு சுமார் 700 லிட்டர் கள்ளச்சாராயம் ஊரல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 217 மது பாட்டில்கள் மற்றும் 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு
எதிரிகள் மீது 07 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார், என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
0 Comments