திருப்பத்தூர் -அக் -04,2024
Newz -webteam
திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையம் மற்றும் மாவட்ட குற்ற பிரிவை (DCB) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., நேற்று பார்வையிட்டார்.
அப்போது காவல் நிலையம் மற்றும் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும், கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்பவர்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், காவல் நிலைய நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்திற்குட்பட்டு இருக்க வேண்டும் என காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவல் ஆளினர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
0 Comments