அரியலூர் -அக் -05,2024
Newz -webteam
எடுத்துக்காரன் பட்டி கிராமத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கிராம குற்ற விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.கார்த்திகேயன் இ.கா.ப., அவர்கள் அறிவுரையின்படி அரியலூர் மாவட்டம் அரியலூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எடுத்துக்காரன்பட்டி கிராமத்தில் 05.10.2024 இன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்கள் தலைமையில் கிராம குற்ற விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது.கூட்டத்தில் ஊர் முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திருட்டு,கொள்ளை, வழிப்பறி குற்றங்கள் குறித்தும், ஆகியவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள செய்ய வேண்டியவை குறித்தும், வீடுகள் , பொது இடங்களில், முக்கிய சந்திப்புகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதன் அவசியம் குறித்தும், மூன்றாவது கண்ணான சிசிடிவி கேமராவை பொருத்துவதன் மூலம் குற்றங்களை முன்கூட்டியே தடுக்க இயலும் மற்றும் குற்றவாளிகளை எளிதில் பிடிக்க இயலும்.கிராமத்தில் வரும் சந்தேக நபர்கள் பற்றியும், கிராமத்தில் நடக்கும் குற்ற செயல்கள் குறித்தும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் வெளியூர் செல்லும் பொழுது காவல் நிலையத்தில் தகவல் அளிக்க வேண்டும். மேலும் இணைய வழி குற்றம் ,பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப் பொருட்கள் எதிரான விழிப்புணர்வு, மற்றும் சாலை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். பெண்கள் பாதுகாப்பு உதவி எண் (Women Help Desk) -181, குழந்தைகள் நல பாதுகாப்பு உதவி எண்- 1098, சைபர் கிரைம் உதவி எண் -1930, காவல்துறை அவசர உதவி எண் 100, மேலும் காவல் உதவி செயலி(Kaaval Uthavi app) குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதேபோன்று அரியலூர் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களில் காவல்துறையினர் சார்பில் பொது மக்களுக்கு குற்ற விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களுக்கு குற்றங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டன.
0 Comments