திருநெல்வேலி – அக் -26,2024
Newz -webteam
தேசிய தன்னார்வ இரத்தான தினம் முன்னிட்டுஇரத்தக் கொடையாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி இன்று பாளை ஐகிரவுண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்தது.
பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்பாக தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு இரத்த கொடையாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் சிறப்பு அழைப்பாளராக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் ரேவதி பாலன் கலந்துகொண்டு இரத்த கொடையாளர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார் .
இதில் ஏராளமான சமூக தொண்டு அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவர் பாலசுப்பிரமணியன், மருத்துவர் எஸ்தர், குருதிமைய அலுவலர் மருத்துவர் ரவிசங்கர், மருத்துவர் பிரதிபா, செவிலியர் தனலட்சுமி மற்றும் இரத்த மைய குழுவினர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments