மதுரை -அக் -28,2024
Newz -webteam



28.10.2024 தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் I.P.S., தலைமையின் கீழ், வருகின்ற அக்டோபர் 30 ல் நடைபெறும் தேவர் ஜெயந்தி, சம்பந்தமான சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் I.P.S., மற்றும் மதுரை மாநகர காவல் துணை ஆணையர்கள் கருண் கரட் I.P.S., (தெற்கு), மதுக்குமாரி I.P.S., ( வடக்கு), த வனிதா T.P.S.,(போக்குவரத்து), ராஜேஸ்வரி T.P.S.,(தலைமையிடம்) மற்றும் தேவர் ஜெயந்தி பாதுகாப்பு பணிக்காக மதுரை மாநகர் வந்துள்ள மதுரை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் .இனிகோ திவ்யன் மற்றும் சென்னை சைபர் கிரைம் கண்காணிப்பாளர் .ஈஸ்வரன், பழனி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 14 ம் அணியின் கமாண்டன்ட் கார்த்திக் மற்றும் காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள் , காவல் உதவி ஆணையர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை பாதுகாப்பு மற்றும் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு வரக்கூடிய பால்குடம் , முளைப்பாரி ஊர்வலங்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் வருகை சம்மந்தமான பாதுகாப்புகள் குறித்தும், மதுரை மாநகர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனுக்கு வாகனங்களில் செல்லக்கூடியவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் செல்லக்கூடிய வழித்தடங்கள் மற்றும் அதற்காக காவல் நிலையங்களில் பெறக்கூடிய அனுமதி சீட்டு குறித்தும், சோதனை சாவடிகளில் பணிபுரியும் காவலர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மதுரை மாநகரில் தேவர் ஜெயந்தி, முதல்வர் வருகை மற்றும் தீபாவளி பாதுகாப்பு பணிக்காக சுமார் 3200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
0 Comments