கோயம்புத்தூர் -நவ -13,2024
Newz – Webteam
வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 நபர்களை கைது செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்…
கோவை மாவட்டம் கே.ஜி. சாவடி காவல் நிலைய பகுதியில் பாலக்காடு சேர்ந்த சுரேஷ் (45) கடந்த 08.11.2024 அன்று வேலந்ததாவளம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர் சுரேசை கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூபாய் 54,00,000/- பணத்தை வழிப்பறி
செய்து
அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் கே.ஜி சாவடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இப்புகாரில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டகாவல்கண்காணிப்பாளர் கார்த்திகேயன், இ.கா.ப., உத்தரவிட்டதன்பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில்
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நாகேஷ் லக்ஷ்மணா மகன் சுமித் நாகேஷ் சலுங்கே (25) மற்றும் கோவிந்தன் சலுங்கே மகன் சனீஸ் கோவிந்தன் சலுங்கே (35)ஆகியோர்கள் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இந்நிலையில் தனிப்படையினர் மேற்படி நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 41,00,000/- பணத்தை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
0 Comments