திருநெல்வேலி -ஜன -17,2025
Newz -webteam
திருநெல்வேலி மாவட்டத்தில் இளையராஜாவின் இசை கச்சேரிக்கு வருபவர்கள் குறுகிய சாலை வழியாக வரவேண்டி உள்ளதாகவும், அதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ஒரு நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இது தொடர்பாக கீழ்க்கண்ட மறுப்பு அறிக்கை வெளியிடப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற உள்ள இளையராஜாவின் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர், செய்துங்கநல்லூர், சிவந்திபட்டி போன்ற பகுதிகளிலிருந்து வருபவர்கள் செய்துங்கநல்லூர், சிவந்திப்பட்டி வழியாக வந்து செல்லும் வகையிலும், கன்னியாகுமரி மற்றும் தென் பகுதியிலிருந்து வருபவர்கள் ராஜகோபாலபுரம் பாலம் வந்து திரும்பி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வரவும், திருநெல்வேலி மாநகரம் மற்றும் வடக்கு பகுதிகளிலிருந்து வருபவர்கள்
திரும்பி செல்லும்போது தெற்கே அருகேயுள்ள மேம்பாலம் வந்து திரும்பி நான்கு வழிச்சாலைக்கு செல்லும் வகையிலும், நிகழ்ச்சி முடிந்து செல்லும் வாகனங்கள் செல்ல அதற்கான தனியாக புதிதாக அமைக்கப்பட்ட வேறு பாதையில் செல்லும் வகையிலும் செல்ல திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இருசக்கர வாகனங்கள், VIP, VVIP, MIP மற்றும் இதர வாகனங்களுக்கு தனித்தனியே பார்க்கிங் செய்ய வசதிகள் செய்யப்பட்டும்
, பேரிகார்டுகள் மற்றும் அடையாளப் பலகைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் வந்து செல்ல போதுமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள ப்பட்டுள்ள பட்டுள்ளதாகவும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன்., தெரிவித்தார்.
0 Comments