திருநெல்வேலி – ஜன -15,2025
Newz -webteam

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் கண்ணாடிகளை உடைத்தும், மருத்துவப் பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்த நபர் மீது வழக்கு பதிவு.
திருநெல்வேலி மாநகரம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் இன்று , உள்நோயாளியாக சிகிச்சையில் இருந்த கோயம்புத்தூர் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த முகம்மது ஆசிப் ரகுமான் (29) என்பவர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் ரூ 30,000/- மதிப்புடைய கண்ணாடிகளை உடைத்ததாகவும்,
மருத்துவப் பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் மருத்துவக் கல்லூரி மருத்துவ அதிகாரி மருத்துவர் ஸ்டெபி (34) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
0 Comments