திருநெல்வேலி – பிப் -13,2025
Newz -webteam


திருநெல்வேலி மாநகர போக்குவரத்து துறை மற்றும் அருனா கார்டியா கேர் மருத்துவமனை சார்பில் பெற்றோர்களுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த 25 சிறுவர்களுக்கு தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் துணை கமிஷனர்
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., அறிவுறுத்தலின் படி கிழக்கு காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் தலைமையில் அருனா கார்டியா கேர் மருத்துவமனை சார்பில் நெல்லை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில்
இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் மேலும் உடன் பயணிக்கும் குழந்தைகளும் தலைக்கவசம் அணிவது சாலச்சிறந்தது. என்று அறிவுரை வழங்கி பெற்றோர்களுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த 25 சிறுவர்களுக்கு காவல் துணை ஆணையர் அவர்கள் தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். உடன் போக்குவரத்து பிரிவு உதவி ஆணையர் திரு.அசோக் குமார் அவர்கள் போக்குவரத்து காவல் ஆய்வாளர் (பாளை) செல்லத்துரை மற்றும் காவல் துறையினர் கலந்துகொண்டனர்.
0 Comments