சென்னை – பிப் – 13,2025
Newz – Webteam
போதைப்பொருள் விழிப்புணர்வு பற்றிய குறும்படங்கள் ரீல்ஸ்களை வெளியிடுதல் மற்றும் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பரிசளிப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் 2022 ஆம் ஆண்டு “போதையில்லா தமிழ்நாடு” என்ற இலக்கை அறிவித்தார். இந்த இலக்கை அடைய, தமிழ்நாடு காவல் துறை, அமலாக்க பணியகம் குற்றப்புலனாய்வுத் துறை (EBCID) NDPS சட்டங்களை கடுமையாக அமல்படுத்திடவும், சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உறுதிபூண்டுள்ளது.


இதன் ஒரு பகுதியாக, சென்னை நகரில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்காக, போதைப்பொருள் விழிப்புணர்வு குறும்படங்கள் ரீல்ஸ்கள் உருவாக்கும் போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் 8 கல்லூரிகள் கலந்து கொண்டன, மேலும் 23 காணொளிகள் மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்டன. அதிலிருந்து 3 சிறந்த காணொளிகள் தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வெற்றியாளர்கள்:
- முதல் பரிசு: ஆர்.சூரியன் & குழு கல்லூரி, டி.ஜி.வைஷ்ணவக் அரும்பாக்கம், சென்னை ரூ. 1,00,000/- மற்றும் பாராட்டு சான்றிதழ்.
- இரண்டாம் பரிசு: டி. கார்த்திக் – பெட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அடையார், சென்னை ரூ. 50,000/- மற்றும் பாராட்டு சான்றிதழ்.
- மூன்றாம் பரிசு: மே. பி. ரஜேஸ்வரி – எம்.ஒ.பி. வைஷ்ணவ மகளிர் கல்லூரி, நுங்கம்பாக்கம், சென்னை ரூ. 25,000/- மற்றும் பாராட்டு சான்றிதழ்.
மேலும், போட்டியில் பங்குபெற்ற 20 குழுக்களின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் ஓவ்வொரு குழுவிற்கும் ரூ. 10,000/-மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் ஷங்கர் ஜிவால், ஐ.பி.எஸ்., அவவெற்றியாளர்களுக்கும், போட்டியாளர்களுக்கும் வழங்கினார்.
பரிசுகளை Scanned with OKEN Scanner
தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் மாணவர்களின் சுறுசுறுப்பான பங்கேற்பை பாராட்டி, அவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை உருவாக்கியதற்காக நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர். ஏ. அமல்ராஜ், ஐ.பி.எஸ்., கூடுதல் இயக்குநர், EBCID, ஜி. கார்த்திகேயன், ஐ.பி.எஸ்., அமலாக்கம், காவல் கண்காணிப்பாளர், ஆ.மயில்வாகனன், ஐ.பி.எஸ்.,போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு, சென்னை மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
0 Comments