தூத்துக்குடி – செப் – 19,2025
Newz – Webteam


தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ரூபாய் 40 லட்சம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன் படுத்திய சரக்கு வாகனம் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி நகர உட்கோட்டம் வடபாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட. திரேஸ்புரம் வடக்கு கடற்கரையில்(படகு பழுதுபார்க்கும் இடம்) இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்துவதாக க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் உதவி ஆய்வாளர்.ராமசந்திரன் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் தலைமை காவலர்கள் இருதயராஜ் குமார் இசக்கி முத்து மற்றும் காவலர்கள் பழனி பாலமுருகன் பேச்சி ராஜா ஆகியோர் ரோந்து அலுவல் செய்த போது இன்று 19.09.25ம் தேதி அதிகாலை 00.40 மணிக்கு இலங்கைக்கு கடத்துவதற்காக TN 91 AX 5603 என்ற பதிவு எண் கொண்ட. TATA INDRA லோடு வேனில் கொண்டுவரப்பட்ட சுமார் 30 கிலோ எடை கொண்ட 42 மூட்டை பிடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகுடன் எதிரிகள் தப்பி ஓடி விட்டார்கள்.மேற்படி கைப்பற்ற பட்ட பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட வாகனம் சுங்கத்துறை வசம் ஒப்படைக்க பட உள்ளது.
கைப்பற்ற பட்ட பீடி இலைகள் மதிப்பு சுமார் 40 இலட்சம் ஆகும்.
0 Comments