அரியலூர் – அக் -07,2025
Newz – Webteam


சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் காவல் நிலையத்தில் 2023-ஆம் ஆண்டு போடப்பட்ட போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்து, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வந்த குற்றவாளியை கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தந்தனர்.
இத்தகைய மெச்ச தகுந்த பணிகளைச் செய்த உடையார்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் , தலைமைக்காவலர் பாலமுருகன், முதல் நிலைக் காவலர் முகமது தஸ்லீம் மற்றும் பெண் தலைமைக் காவலர் வனிதா (நீதிமன்ற பணி) ஆகியோர்களை, மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., இன்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
0 Comments