விழுப்புரம் – டிச -11,2025
Newz – Webteam

சென்னையில் இருந்து பெண்ணை கடத்தி வந்த காரை மடக்கிப்பிடித்த போலீசார்
கடந்த 04.12.2025 ஆம் தேதி அன்று சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவியை காரில் கடத்தி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து
அவர்களை பிடிக்க மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக நெடுஞ்சாலை ரோந்து என் இரண்டில் பணியில் இருந்த தலைமை காவலர்கள் கார்த்திகேயன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,
தகவல் கிடைத்தவுடன் விரைந்து செயல்பட்ட காவலர்கள் விக்கிரவாண்டி அடுத்த சித்தணி அருகே திருச்சியை நோக்கி சென்ற காரை பின் பின் தொடர்ந்தபோது அவ்வாகனம் U TURN எடுத்து சென்றபோது துரிதமாக செயல்பட்டு மடக்கி பிடித்த தலைமை காவலர்கள் இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P.சரவணன்,IPS., நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

0 Comments