ஆவடி – நவ-02,2023
newz – webteam
ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்றப்பிரிவில் காந்தி 40/23, இவர் உதவி ஆய்வாளர் பணி செய்து ஓய்வு பெறஂறவரஂ இவர் அளித்த புகார் மனுவில் சென்னை திருமுல்லைவாயலில் புகார்தாரரின் மனைவி விஜயலட்சுமிக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்ட பணம் பற்றாக்குறை ஏற்பட்ட போது தனது மகன் ரமேஷ் என்பவர் வங்கி மூலம் லோன் வாங்க முயற்சித்த போது வீட்டு மனையின் கட்டிட வரைபட அனுமதி இல்லாததால் வங்கி லோன் கிடைக்கவில்லை என்றும் அப்போது பேங்க் லோன் ஏஜென்ட் எனக் கூறி செந்தில்நாதன் மற்றும் பார்த்தசாரதி லோன் வாங்கி தருவதாக கூறி சிஜு பிரபுடேனியல், சத்தியமூர்த்தி, லோகேஷ் ஆகியோர் ஒன்று சேர்ந்து விஜயலட்சுமியிடம் இருந்த சொத்தை பவர் வாங்கி எழுதிகொண்டு 5 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதி பணத்தை பெற்றுதாராமல் காலம் தாழ்த்தியுள்ளார்கள், மனுதாரர் சந்தேகமடைந்து சொத்திற்கு வில்லங்கசான்று போட்டு பார்த்த போது விஜயலட்சுமி என்பவரது கையெழுத்தை போலியாக போட்டு வாழ்நாள் சான்றிதழையும் தயார் செய்து மூன்று பேரும் ஒன்று சேர்ந்து பிரபுடேனியல் என்பவருக்கு கிரையப்பத்திரம் பதிவு செய்து கொடுத்து பின்னர் தங்களது சொத்தினை பிரபுடேனியல் மற்றும் கேத்திரின் மேரி ஆகிய இருவரும் சென்னை அண்ணாசாலையில் உள்ள யுகோ வங்கியில் ரூபாய் 64,59,000/- க்கு லோன் பெற்று மனுதாரரை ஏமாற்றி எதிரிகள் சுயலாபம் அடைந்துள்ளார்கள். இதன் மதிப்பு சுமார் 85 லட்சம் ஆகும்.
இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்க கொடுத்த புகாரின் மீது போலி ஆவண தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட் மேரி விசாரணை மேற்கொண்டு ஆவடி காவல் ஆணையாளர் K.சங்கர் IPS, மற்றும் காவல் துணை ஆணையாளர் P.பெருமாள் IPS. ஆகியோரின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான சிஜு 40/23, த/பெ ஜோசப்ஜான், என்பவரை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 Comments