திருப்பத்தூர் – செப் -08,2023
newz – ameen
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS.,அவர்களின் உத்தரவின் படி ஆம்பூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாயக்கனேரி மலை கிராமத்தில் அன்று 06.09.2023 மாலை ஆம்பூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் செம்மரக்கட்டை வெட்டுதல் மற்றும் கடத்துதல் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் நாயக்கனேரி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சுமார் 100 நபர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களிடம் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம்,
சேஷாசல வனப்பகுதிகளில் செம்மரக்கட்டைகளை வெட்டுவதற்காக மேற்குறிப்பிடப்பட்ட கிராமத்திலிருந்து இளைஞர்கள் சிலர் செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்களுக்கு அந்த குற்றச்செயல் புரியாத வண்ணம் தடுக்கும் பொருட்டு அவர்களுக்கு விழிப்புணர்வு தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டது. இவர்களை அழைத்துச் செல்லும் இடைத்தரகர்கள் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தெரிவிக்குமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
மீறினால் காவல்துறை மூலமாக கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை எச்சரித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments