திருநெல்வேலி -அக் -11,2024
Newz -webteam
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 14 வருடங்களாக தலைமறைவாக இருந்த பிடியாணை எதிரியை கைது செய்த கங்கைகொண்டான் காவல்துறையினர்
கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2009 -ம் வருடம் ஸ்பிரிட் கடத்தல் வழக்கில் ஈடுபட்ட மதுரை, அலங்காநல்லூரை சேர்ந்த ராஜேஷ் (39) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார். மேற்படி ராஜேஸுக்கு நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 14 வருடங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், எதிரிக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
மேற்படி ராஜேஷை கங்கைகொண்டான் காவல் நிலைய காவல்துறையினர் தேடிவந்த நிலையில், கேரளா மாநிலம் கொல்லத்தில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவல்களின் பேரில், மாவட்ட காவல்துறையினர் கொல்லத்திற்கு சென்று ராஜேஷை இன்று கைது செய்தனர்.
0 Comments