

திருநெல்வேலி -அக் -11,2024
Newz -webteam
சகாய சஜின் வயது 25 நகர்கேரவிலை சேர்ந்தவர். இவர் திருநெல்வேலியில் உள்ள சிராமிக் டைல்ஸ் நிறுவனத்தில் சேல்ஸ் எஸ்டிகுட்டிவாக பணிபுரிந்து வருகிறார் இவருக்கு தந்தை கிடையாது இவரது தாயார் மற்றும் சகோதர சகோதரிகள் உள்ளனர்
இவர் 9 . 10 . 2024 அன்று சுமார் காலை 7 மணி அளவில் தங்கி பணிபுரியும் வீட்டில் மேலிருந்து கீழே விழுந்து சுயநினைவு இன்றி இருக்கும் இவரை இவருடன் பணிபுரியும் சக ஊழியர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மிகவும் மோசமாக நிலையில் இருப்பதாக உறவினர் மற்றும் பணிபுரியும் சக ஊழியரிடம் தெரிவித்துள்ளனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மிகவும் மோசமான நிலை உள்ளதாக தெரிவித்துள்ளனர் மற்றும் மூளை செயல்பாடு இருப்பதை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனைகள் அறிக்கையில் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பதை அவருடைய உறவினரிடம் தெரிவித்தனர். பின்பு தாமாக முன்வந்து அவருடைய உறவினர்கள் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், தோல் தானமாக அளிப்பதற்கு முன் வந்தனர். இவரின் மூலம் 6 நோயாளிகள். பயனடைந்துள்ளனர்.
0 Comments