தூத்துக்குடி – ஜன -09,2024
Newz – webteam
தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்றபோது போலீசாரின் பிடியில் இருந்து கொலைக்குற்றவாளி கைதி ஒருவர் தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் செல்வ சதீஷ் (எ)சூப்பி. இவரை கொலை வழக்கில் தென்பாகம் போலீசார் கைது செய்தனர். பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட அவர் இன்று வழக்கின் விசாரணைக்காக தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு போலீசாரால் அழைத்து வரப்பட்டார்.
அப்போது அவர் திடீரென போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோடி விட்டார். தப்பியோடிய அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments