சென்னை – ஜன -10,2024
Newz – webteam
சென்னை பெருநகர காவல் துறை மற்றும் சென்னை மாநிலக்கல்லூரி இணைந்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கிடையே நடத்திய “பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு” பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு காவல் ஆணையாளர் பரிசுகள் வழங்கினார்.
சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு “பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் சென்னை பெருநகர காவல் மற்றும் சென்னை மாநில கல்லூரியும் இணைந்து, கல்லூரி மாணவ மாணவிகளுக்கிடையே பேச்சுப்போட்டிகள்” மற்றும் ‘விவாத போட்டிகள் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர். இ.கா.ப உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி இ.கா.ப மற்றும் , பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு துணை கமிஷனர் வணிதா ஆகியோர் நேரடி மேற்பார்வையில் இன்று சென்னை மாநில கல்லூரியில் உள்ள PROF POWELL கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் “பெண்கள் பாதுகாப்பும் சமூக முன்னேற்றமும்” என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியும், ‘இன்றைய பெண்களின் உயர்வுக்கு அலுவலக பணிக்கு செல்வது சிறந்ததா அல்லது தொழில் முனைவராவது சிறந்ததா என்ற தலைப்பில் விவாத மேடை போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேச்சுப்போட்டியில் வென்ற மாணவ மாணவியர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.3000/-, இரண்டாம் பரிசாக ரூ.2000/- மூன்றாம் பரிசாக ரூ.1000/- மற்றும் விவாத மேடை போட்டியில் வென்ற மாணவ மாணவியர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.4000/-, இரண்டாம் பரிசாக ரூ. 3000/-. மூன்றாம் பரிசாக ரூ.2000/-ம் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் இ.கா.ப வழங்கப்பட்டது. இப்போட்டிகளில் பங்குபெற்ற மற்றும் வெற்றி பெற்ற மண மாணவியர்களை ஊக்குவித்து பரிசுகள் வழங்கி பாராட்டினார். மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளையும், விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையாளர் முனைவர்.வனிதா (CAWC)
கூடுதல் காவல் துணை ஆணையாளர் அண்ணாதுரை, (CAWC), மாநிலக்கல்லூரி
முதல்வர் முனைவர் R. இராமன் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
0 Comments