திருநெல்வேலி -செப் -29,2024
Newz -webteam
நெல்லையில் சட்டம் ஒழுங்கு ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி சங்கர்ஜிவால் பங்கேற்பு
4 மாவட்டங்களில் நடப்பாண்டில் 271 கிலோ கஞ்சா பறிமுதல்
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நான்கு மாவட்டங்களை சேர்ந்த சேர்ந்த போலீஸ் உயரதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனை மற்றும் மதிப்பாய்வு கூட்டம் கடந்த 2 நாட்களாக நடத்தினார்.
கூட்டத்தில், 2024ம் ஆண்டில் இதுவரை நெல்லை மாநகரம் மற்றும் நெல்லை சரகத்தில் 170 கஞ்சா வியாபாரிகள் மீது 356 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 271 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாக நடந்த மதிப்பாய்வு கூட்டத் தில் கொலை, கொள்ளை, திருட்டு வழக்குகள் போன்ற முக்கியமான பிரச்னைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும் ரவுடித்தனத்தைக் கட்டுப் படுத்தவும், ஜாதி மற்றும் வகுப்புவாத பிரச்னைகளைக் கட்டுப்படுத்தவும், குற்றங்களை கண்டறிதல் மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கைகள், இணையவழி குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவை அதிகரிக்கவும், சாலை விபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கை களை செயல்படுத்தவும் டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவுகளை பிறப்பித்தார்.
குறிப்பாக கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதில் கவனம் செலுத்தவும், குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பொருளாதார விசாரணை மேற்கொள்ளவும்.
அக்குற்றவாளிகளின் சொத்துக்கள் மற்றும் வங்கிக்கணக்கு களை முடக்குவது தொடர்பான நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த அறிவுரைகள் வழங்கினார்.
நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் போலீசாரின் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றார்.
போலீஸ் துணை கமிஷனர்கள் மாநகர தலைமையிடம் அனிதா,மேற்கு கீதா, கிழக்கு விஜயகுமார் மற்றும் 4 மாவட்ட போலீஸ் உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
2024ம் ஆண்டில் இது வரை நெல்லை மாநகரம் மற்றும் நெல்லை சரகத்தில் 170 கஞ்சா வியாபாரிகள் மீது 356 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 271 கிலோ கஞ்சா கைப்பற்றப் பட்டுள்ளது. மேலும் 2024ம் ஆண்டில் 159 கஞ்சா வழக்குகள் தண்டனையில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. 2021 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், மொத்தம் 2 ஆயிரம் கிலோ கஞ்சா சட்ட வழிமுறைகளின்படி அழிக்கப்பட்டது.
போதைப்பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
காவல்துறையினர் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மொத்தம் 19,997 சோதனைகள் நடத்தப்பட்டு, 183 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, 3 ஆயிரத்து 483 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், காவல் துறையினரால் 985 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 9 ஆயிரத்து 163 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றில் 4 ஆயிரத்து 071 8 கிலோ புகையிலை பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளது. மேலும் அவற்றினை விற்பனையில் ஈடுபட்ட 491 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் திருத்தப்பட்ட மதுவிலக்கு சட்டத்தை கடுமையாக அமல்படுத்தி கள்ள சாராயம் மற்றும் சட்டவிரோத மது விற்பனையை (குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து) தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை சரகத்தில் சட்டவிரோதமாக கள்ள மது வடிப்பிற்கு எதிராக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அக்குற்றத்தில் ஈடுபட்ட 11 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 4 குற்றவாளிகளின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
0 Comments