சென்னை – டிச -27,2023
Newz – webteam
கடந்த 17.12.2023-ம் தேதி தலைமை செயலாளர். தமிழ்நாடு, கூடுதல் தலைமை செயலாளர் வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர், உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் சென்னை வானிலை ஆய்வு மையம் கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி. தென்காசி. மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவித்ததையடுத்து மேற்கண்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தினார்
காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், இகாப அறிவுறுத்தல்படி 3 தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழுக்களை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பேரிடர் மீட்புப் பணிகளை செய்வதற்காக அனுப்பபட்டது. காவல்துறை தலைமை இயக்குநர் தென்மண்டல காவல்துறை தலைவர். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மீட்பு திட்டங்களை வகுத்து அளிக்குமாறு கேட்டு கொண்டார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாவட்ட ஆட்சியாளர்களை அணுகி தேவையான மீட்பு உபகரணங்கள் மற்றும் நிவராண பொருட்களை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தினார்
கூடுதல் டிஜிபி அருண் இ.கா.ப அனைத்து காவல் ஆணையாளர்களையும் மற்றும் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களையும் எச்சரித்து பேரிடர் மீட்புப் பயிற்சியை முடித்த காவல் ஆளிநர்களை உபகரணங்களுடன் தெற்கு மாவட்டங்களுக்கு எந்நேரத்திலும் புறப்படுவதற்காக தயார் நிலையில் இருக்க ஆணையிட்டார். தென் மண்டல ஐஜி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உடனிருந்து பணியாற்ற அறிவுறுத்தினார்.
முதற்கட்டமாக அணைகளின் நீர் வெளியேற்றத்தை கண்காணிக்கவும், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து வெள்ள நிவாரண பணிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கவும், தாழ்வான பகுதிகள், நீர் தேங்கும் பகுதிகள் மற்றும் நிவாரண மையங்களை அடையாளம் காணவும், அந்தந்த மாவட்ட காவல்துறை சார்பாக குழுக்கள் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. மேற்கண்ட ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநில பேரிடர் மீட்புப் பயிற்சி பெற்ற அனைத்து காவல் ஆளினர்களும் தேவையான பேரிடர் பாதுகாப்பு உபகரணங்களுடன் அணி திரட்டப்பட்டு மீட்புப் பணிக்கு தயார் நிலையில் இருந்தனர்.
மேலும், இடைவிடாமல் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டு இருந்ததால் காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் உத்தரவின் படி தமிழக பேரிடர் மீட்புப் படையின் மொத்தம் 15 குழுக்களில் 400 காவல் ஆளினர்களும், தமிழ்நாடு சிறப்பு படைகளின் 04 தளவாய்கள் தலைமையில் 04 மீட்பு குழுக்களும் மற்றும் பேரிடர் சிறப்பு பயிற்சி முடித்த 15 காவலர்களைக் கொண்ட 19 குழுக்களில் 307 காவல் ஆளிநர்ளும் மண்டலம் மாநகரங்களில் இருந்து கூடுதலாக பேரிடர் மீட்புப் பணிக்கு திருநெல்வேலி சரகம் முழுமைக்கும் அனுப்பப்பட்டனர். இது தவிர தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் 10 குழுக்களில் 250 காவல் ஆளினர்களும் அனுப்பப்பட்டனர்.
48 மீட்பு குழுக்களில் 32 குழுக்கள் தூத்துக்குடி மாவட்த்திலும் 14 குழுக்கள் திருநெல்வேலி மாவட்டத்திலும் ஒரு குழு திருநெல்வேலி மாநகரத்திலும் ஒரு குழு கன்னியாகுமரி மாவட்டத்திலும் மீட்புப் பணிகளை செய்தனர். மேலும் தேவையின் காரணமாக 21/12/2023 -ம் தேதி அனைத்து 48 மீட்பு குழுக்களும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மீட்பு பணியில் அமர்த்தப்பட்டனர்.
வெளி மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களை சேர்ந்த 48 மீட்பு குழுக்கள் இல்லாமல் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 8600 காவல் ஆளிநர்கள் மீட்புப் பணிக்காக ஈடுப்படுத்தபட்டார்கள்.
கூடுதல் டிஜிபி (ஆப்ரேஷன் )ஜெயராம், இ.கா.ப பேரிடர் மீட்புப் பணிகளுக்கு ஒருங்கிணைப்பு அதிகாரியாக நோடல் ஆபிஸராக
செயல்பட்டார் களத்தில் இருந்த அனைத்து மீட்பு குழுக்கள். அனைத்து துறையிலான மத்திய மாநில அதிகாரிகளை ஒருங்கினைத்து செயல்பட்டு இந்தப் பேரிடர் மீட்பு பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு வந்தார் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மீட்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஓர் உயர் அதிகாரி நியமிக்கப்பட்டனர். திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ்குமார், இ.கா.ப கன்னியாகுமரி மாவட்டத்திலும், இராமநாதபுரம் சரக டிஐஜி துரை, இ.கா.ப தூத்துக்குடி மாவட்டத்திலும், திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் அபினவ் குமார், இ.கா.ப தென்காசி மாவட்டத்திலும் முகாமிட்டு மேற்படி பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டனர்.
மேலும், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் மகேஸ்வரி, இ.கா.ப திருநெல்வேலி மாநகரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்படி மீட்பு பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டார். இந்நான்கு மாவட்டங்களிலும் மேற்கண்ட பணிகளை தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயர், இ.கா.ப கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டார்.
கடந்த 17ம்தேதி மதியம் 03.00 மணி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர், தமிழக அரசின் அனைத்து துறைகளின் முதன்மை அதிகாரிகள் மற்றும் களப்பணியில் இருந்த உயர் அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் இருந்த உயர் அதிகாரிகள் அனைவரும் நேரிலும் மற்றவர்கள் வீடியோ கான்பரன்சிங் முறையிலும் இணைந்து கலந்தாய்வு செய்து மக்களை பேரிடத்திலிருந்து மீட்பது மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து செய்வது சம்பந்தமாக ஆலோசனைகள் வழங்கினார்
இந்தப் பேரிடர் காலங்களில் டிஜிபி சங்கர் ஜிவால், தினசரி மருதம் வெள்ளக் கட்டுப்பாட்டு அறைக்கு பல முறை நேரில் பார்வையிட்டு ஜெயராம், IPS., ADGP, Operations மற்றும் அவருடன் பணியாற்றிய அதிகாரிகளை கலந்தாய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்
இயற்கை பேரிடரை கையாள்வதற்காக தென் மாவட்டங்களில் பணி செய்த காவல் கண்காணிப்பாளர்கள் மூன்று பேர் கூடுதலாக பணி நியமனம் செய்யப்பட்டனர். கடலோர பாதுகாப்பு படை காவல் கண்காணிப்பாளர் திரு ஹரிகிரன் பிரசாத் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் சிறப்பு இலக்கு படை காவல் கண்காணிப்பாளர் ராஜன் திருநெல்வேலி மாவட்டத்திற்கும் ஓசிஐயு பிரிவு காவல்கண்காணிப்பாளர் .சரவணன் திருநெல்வேலி மாவட்டத்திற்கும் பணி நியமனம் செய்யப்பட்டார்கள். கூடுதலாக தூத்துக்குடி மாவட்டத்தில் பணி செய்த துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அளவிலான அதிகாரிகளை கண்டறிந்து அவர்களையும் கூடுதலாக பணிகளுக்கு அழைக்கப்பட்டது.
அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவ மழைக்காக ஏற்கனவே செயல்பட்டு வந்த மாவட்ட கட்டுப்பாட்டு அறைகளில் தொடர் கன மழை காரணமாக உடனுக்குடன் முடிவெடுக்கும் பொருட்டு உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டது மேலும் கூடுதல் டிஜிபி ஜெய்ராம் மேற்பார்வையில் மருதம் வளாகத்தில் செயல்பட்டு வந்த தமிழக காவல்துறையின் சிறப்பு வெள்ள கட்டுப்பாட்டறை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 24×7 செயல்பட்டு அனைத்து மாவட்ட மற்றும் மாநகர கட்டுப்பாட்டு அறைகளுடன் தொடர்பில் இருந்து தகவல்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் எடுத்து சிறப்பாக செயல்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தால் காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் புதிதாக சிறப்பு வெள்ள கட்டுப்பாட்டறை ஆரம்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. தொடர் கனமழை வர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து நான்கு மாவட்டங்களிலும் உள்ள அனைத்து அதிகாரிகள், காவலர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியில் இருந்தனர்.
மேலும் காவல் ரோந்து வாகனங்கள் அனைத்திலும் ஒலிபெருக்கிகள் அமைத்து
தொடர்ந்து ஆற்றங்கரையோர பகுதிகள், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மழைநீர்தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்ததுடன் தரைபாலங்கள் இருந்த பகுதிகளில் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டத்தைதடுக்கும் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மாவட்ட காவல்துறையினர் பல்லாயிரக் கணக்கான மக்களை வெள்ளத்திற்கு முன்னதாக வெளியேற்றினர்.
17.12.23 அன்று காலை முதல் தொடர் கன மழை பெய்து வந்ததால் அனைத்து மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுடன் இணைந்து அனைத்து அரசு துறையின் சார்பாக ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு இருந்த தாழ்வான பகுதிகளில் குடியிருந்த 39845 நபர்களை பாதுகாப்பாக வெளியேற்றி அவர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
கடலோர காவல்படை கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் தலைமையில் தமிழ்நாடு கடலோர காவல் படையிலிருந்து ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பெற்ற 100 காவலர்கள் உட்பட 316 பேர் தூத்துக்குடி மாவட்டம் அனுப்பப்பட்டனர்.
இந்த பேரிடர் மீட்பு பணியில் காவலர்கள் சிறப்பாக செயல்பட்ட சில செயல்கள்
- திருநெல்வேலி மாவட்டம் – கீழநத்தம் கிராமத்தில் மரத்தின் மேல் உயிருக்கு போராடி கொண்டு இருந்த 2 நபர்கள் மீட்பு.
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழநத்தம் என்ற கிராமத்தில் இரவு முழுவதும் வெள்ளத்தில் சிக்கி மரத்தின் மேல் உயிருக்கு போராடி கொண்டு இருந்த இரண்டு நபர்களை மீட்க முயற்சி செய்தபோது முடியாமல் ஹெலிகாப்டர் மூலம் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அந்த நேரத்தில் தமிழக பேரிடர் மீட்பு குழுவைச் சார்ந்த SI அர்ஜுனன் தலைமையிலான குழுவினர் தைரியமாக 1000 மீட்டர் வெள்ளம் சூழ்ந்த இடத்தை கடந்து சென்று ஆபத்திலிருந்து மேற்படி இரண்டு நபர்களையும் மீட்டனர். - தூத்துக்குடி நகரத்தில் கர்ப்பிணிப் பெண்ணையையும், குழந்தையையும் மீட்பு
தூத்துக்குடி நகரத்தில் பேரிடரின் போது கர்ப்பிணிப் பெண் கற்பகவள்ளிக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது அருகில் இருந்த தமிழக பேரிடர் மீட்பு குழுவினரை அழைத்தனர். அவர்கள் உதவி செய்து Bolero Pickup வாகனத்தில் அரசு மருத்துவமனை தூத்துக்குடிக்கு அனுப்பினார்கள். அரசு மருத்துவமனையிலும் நீர் தேங்கி இருந்ததால் உள்ளே செல்ல முடியாத சூழ்நிலையில் தூக்கு படுக்கை வைத்து பேரிடர் மீட்பு குழுவினர் கர்ப்பிணி பெண்ணை படகு மூலம்
அழைத்துச்சென்றபோது தூக்கு படுக்கை-ல் வைத்தே மேற்படி கர்ப்பிணி
பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. தமிழக பேரிடர் மீட்பு குழுவினர் முன்பே
குழந்தை பிறந்த பின்பு அந்த குழந்தையோடு தாயையும் தூக்கிச் சென்றுமருத்துவமனையில் சேர்த்து தாயும் சேயும் தற்போது நலமாக உள்ளனர்.
- வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகனத்துடன் சிக்கிக் கொண்ட58 காவலர்கள் மீட்பு.
பேரிடர் மீட்புப் பணிக்குச் சென்ற 58 காவலர்கள் முக்காணி ஆத்தூர் பாலத்திற்கு முன்பாக சென்று கொண்டிருந்தபோது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகனத்துடன் சிக்கிக் கொண்டனர். கைபேசி தொடர்பு ஏதும் கிடைக்காத காரணத்தினால் சுமார் 48 மணி நேரம் தண்ணீர் உணவு கிடைக்காமல் இருந்தவர்களை மீட்பு படையை சேர்ந்த வேறு அணியினர் சென்று மீட்டு
வந்தார்கள்
0 Comments