

சென்னை – பிப் – 07,2025
Newz – Webteam
தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கைகள்
சுரீந்தர் பகத், IFS, புலம்பெயர்ந்தோரின் பாதுகாவலர் ஜெனரல் இணைச் செயலாளர், OE & PGE பிரிவு வெளியுறவு அமைச்சகம் மற்றும் TR. M. ராஜ்குமார். IFS, புலம்பெயர்ந்தோர் பாதுகாவலர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி,நேற்று காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் தலைமையில் குற்றப்பிரிவு குற்றப்புலணாய்வு துறை அதிகாரிகள் மற்றும் கூடுதல் காவல்துறை இயக்குநர் சைபர் குற்றப்பிரிவு ஆகியோர்களுடன் சைபர் அடிமைத்தனம் மற்றும் சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகமைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
சைபர் அடிமைத்தனம் என்பது படித்த இளைஞர்களுக்கு தரவுப் பதிவேற்றம் செய்வது (Data Entry Operators) மற்றும் வாடிக்கையாளர் சேவை (Customer Service) போன்ற வேலைகள் இருப்பதாகக் கூறி, சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்கள் அல்லது சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்கள் அல்லது தெரிந்த நபர்கள் மூலம் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள மோசடி வளாகங்களுக்கு அழைத்துச் செல்லும் குற்றமாகும். அதிக சம்பளம், இலவச உணவு மற்றும் தங்குமிடம் போன்ற வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம் இளைஞர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.
அவர்கள் மோசடி வளாகங்களை அடைந்ததும், அங்கு அவர்கள் அடைத்து வைக்கப்பட்டு, ஆன்லைன் நிதி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மோசடிகளை செய்ய அவர்கள்
குற்றப்பிரிவு குற்றப்புலணாய்வு துறை என்பது தமிழ்நாட்டில் சைபர் அடிமைத்தனத்தைக் கையாள்வதற்கான முக்கிய பிரிவாகும். தமிழ்நாடு காவல்துறை சுற்றுலா விசாவில் சென்று திரும்பாத சுமார் 1465 இந்திய பயணிகளிடமும்/உறவினர்களிடமும், தங்க முக்கோணம் (Golden Triangle) என்று அழைக்கப்படும் சைபர் குற்றங்கள் நடைபெறும் இடத்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய 335 பாதிக்கப்பட்டவர்களிடமும், அவர்கள் சைபர் அடிமைத்தனத்திற்கு ஆளானார்களா என்பதைக் கண்டறிய அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு. மேலும் விசாரணைகளின் விளைவாக தமிழ்நாட்டில் இதுவரை 24 வழக்குகள் சைபர் அடிமைத்தனம் மற்றும் அது சார்ந்த குற்றங்களுக்காக சென்னை, அரியலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை, நாகப்பட்டினம். விருதுநகர் மற்றும் நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதில் 6 மலேசிய நாட்டவர்கள் உட்பட மொத்தம் 54 சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்கள் மற்றும் பிற குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குற்றம் சாட்டப்பட்ட சிலரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு மற்றும் மத்திய அரசு நிறுவனங்களுடன் தமிழ்நாடு காவல்துறையின் ஒருங்கிணைந்த முயற்சியின் காரணமாக, லாவோஸ், கம்போடியாவுக்குச் செல்ல இருந்த 29 பயணிகள் சைபர் அடிமைத்தனத்தின் அச்சுறுத்தல் குறித்து குடிவரவு அதிகாரிகள் அவர்களுக்கு எச்சரித்ததைத் தொடர்ந்து தங்கள் பயணத்தைத் தாமாக முன்வந்து ரத்து செய்துள்ளனர்.
மேலே குறிப்பிடப்பட்ட சைபர் அடிமைத்தன வழக்குகளில் தொடர்புடைய குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக இதுவரை 28 கண்காணிப்பு சுற்றறிக்கைகள் (Look Out Circulars) தொடங்கப்பட்டுள்ளன. அதில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மியான்மர், லாவோஸ், கம்போடியா போன்ற நாடுகளின் மோசடி வளாகங்களில் இருந்து இதுவரை, தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 372 சட்டவிரோத ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன.
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ், சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்களின் 101 சமூக ஊடகக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன
குற்றப்பிரிவு குற்றப்புலணாய்வு துறையின் அதிகாரிகள் மற்றும் சென்னை நகர காவல்துறையினருடன் இணைந்து குடி பெயர்வோர் பாதுகாவலர் (Protector of Emigrants) நடத்திய சோதனையின் விளைவாக, 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5 சட்டவிரோத முகவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சைபர் குற்றங்கள் சம்மந்தமாக விசாரணை செய்யும் அதிகாரிகளின் புலனாய்வுத் திறனை மேம்படுத்துவதற்காக, சைபர் அடிமைத்தன வழக்குகளைக் கையாளும் 131 காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு செப்டம்பர் அக்டோபர், 2024-இல் இரண்டு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது. சமூக ஊடக உள்ளடக்கங்களை தடுப்பது தொடர்பான பிரச்சனையை கையாள சைபர் கிரைம் பிரிவின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கும் (Nodal Officers) அறிவுறுத்தப்பட்டது
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு குடிமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது. தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் பணிபுரியும் இந்தியப் பிரஜைகளுக்கு சிறப்பு முக் யத்துவம் கொடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கம்போடியாவில் இயங்கி வரும் மோசடி நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியக் குடிமக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்
. தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நாடு திரும்பாத இந்திய குடிமக்கள் பற்றிய விவரங்களும் விவாதிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள பதிவு செய்யப்படாத ஆள்சேர்ப்பு நிறுவனங்களின் பட்டியலை எடுக்க முன்மொழியப்பட்டுள்ளது.
அப்பாவி பொதுமக்கள் சைபர் அடிமைத்தனத்திற்கு இரையாவதைத் தடுக்க சைபர் கிரைம் பிரிவு விரிவான விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் நடத்தியுள்ளனர்.
தங்க முக்கோணத்திற்கு வேலைக்காக வெளிநாடு செல்லும் பயணிகளை திறம்பட கண்காணிப்பதற்காக உள்ளூர் விமான நிலையங்களில் உள்ள குடிவரவு அதிகாரிகளுடன் முறையான ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தீய வட்டத்தில் வீழ்ந்து இணைய அடிமைத்தனத்திற்கு பலியாகாமல் இருக்க தமிழ்நாடு காவல்துறை சமூக ஊடக கையாளுதல்களில் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது
0 Comments