தூத்துக்குடி – டிச -15,2023
Newz – webteam



ஆழ்வார்திருநகரி மற்றும் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் ஆய்வு.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று ஆழ்வார்திருநகரி மற்றும் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மேற்படி காவல் நிலைய போலீசாருக்கு மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் ஸ்டெல்லா பாய், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஹேமலதா மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
0 Comments