திருப்பத்தூர் – பிப் -09,2024
Newz – webteam
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெபின் மகளிர் கல்லூரியில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஒன்றிணைவோம் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பரட்ன் IPS தலைமையில் நடைபெற்றது.
இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் சமம் சாதி மதம் மொழி இன வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதனைக் குறித்தும் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒரு போதும் அடையாளம் காணமாட்டேன் என்றும் சாதி. இன. வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவும் இன்றி இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் அனைத்து சமுதாய மக்களும் எவ்வித பாகுபாடும் இன்றி ஒத்துழைப்பு நல்கிடவும் பாடுபடுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் IAS கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ் கல்லூரி தலைவர் விமல்சன் ஜெயின் செயலாளர் ஸ்ரீசி விசுமிசந்த் கல்லூரி துணை முதல்வர் முனைவர் இன்பவள்ளி அரசு சிறப்பு வழக்கறிஞர் வினோதினி பாண்டியன் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார் திருப்பத்தூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகம் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார். வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் பழனி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆய்வாளர் ராணி சிறப்பு உதவி ஆய்வாளர் கவிதா மற்றும் சுமார் 1000 மாணவிகள் கலந்து கொண்டனர்
0 Comments