ஆவடி -பிப் -06,2025
Newz – Webteam



ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக பல்வேறு வகையான இணையதள குற்றங்கள் மற்றும் மோசடிகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது காவல் ஆணையாளர் சங்கர், இ.கா.ப.தலைமையில் திருமுல்லைவாயல் SM நகர் போலீஸ் கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் ஆணையாளர் மாணவர்களிடையே டிஜிட்டல் கைது. ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடி மற்றும் இணையதளம் மூலமாக ஆசைவார்த்தைகள் கூறி பண மோசடி செய்வது உள்ளிட்ட இணையதள குற்றங்கள் தொடர்பாக 21 கல்லூரியை சேர்ந்த சுமார் 420 மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
.
மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 420 மாணவர்களுக்கும் ஆவடி காவல் ஆணையரக இணையதள குற்றப்பிரிவு போலீசார் மூலமாக இணையதள குற்றங்கள் மற்றும் அதன் வகைகள் குறித்தும் விழிப்புணர்வு மற்றும் விரிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி கல்லூரி மாணவர்கள் போலீசாருடன் இணைந்து ஆவடி ஆணையகத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலைய காவல் பகுதிகளுக்கும் சென்று. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிகவளாகங்கள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் 07.02.2025 முதல் 12.02.2025 வரை பொதுமக்களுக்கு இணையவழி குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையாளர் திருமதி.பவானீஸ்வரி, இ.கா.ப மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் திரு.பெருமாள். இ.கா.ப., இணையவழி குற்றப்பிரிவு காவல் கூடுதல் துணை ஆணையாளர் திரு.அர்னால்ட் ஈஸ்டர் அவர்கள் மற்றும் காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
0 Comments