திருப்பத்தூர் -ஜீன் -10,2024
Newz – webteam
போதையில்லா திருப்பத்தூர் மாவட்டத்தை உருவாக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS. தலைமையில் மாபெரும் விழிப்புணர்வு கைப்பந்து போட்டி. திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக கடந்த மாதங்களில் மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதை இல்லா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது
மாவட்டத்திலுள்ள கிராமப்புறங்கள் உதயேந்திரம், பச்சூர், ஆலங்காயம், புத்தகரம், கரம்பூர், மாடப்பள்ளி, தாச்சியப்பனூர், விண்ணமங்கலம், புதுநாடு மலை போன்ற கிராமங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS. தலைமையில் கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் ஒவ்வொரு சிறப்பாக விளையாடிய விளையாட்டு வீரர்களுக்கு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அவர்கள் சிறப்பு பரிசுகள் வழங்கினார் மேலும் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பைகள் வழங்கி பாராட்டினார்.
அதைத்தொடர்ந்து கடந்த இரு தினங்களாக (08.06.2024 -09.06.2024) திருப்பத்தூர் கோட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS., தலைமையில் கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது போட்டியில் மாவட்ட முழுவதிலும் உள்ள 24 அணிகள் இடம்பெற்று போட்டிகள் நடைபெற்றுது அதில் முதல் பரிசை மத்தூர் அணி ரூ.15,000/- மற்றும் கோப்பைகள் இரண்டாம் பரிசு தண்ணீர் பந்தல் அணி ரூ.10,000/-, மூன்றாம் பரிசு மாவட்ட காவல்துறை அணி ரூபாய் 5000/-, நான்காம் பரிசு துறையேரி அணியும் ரூபாய் 5000/- வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
மேலும் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனை ஒழிப்பதற்கு இளைஞர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்புடன் காவல்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரைகள் வழங்கினார் என்பதனை மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
0 Comments