அரியலூர் – மே -11,2023
newz – webteam
போதைப் பொருள் ஒழிப்பு குழு கலந்தாய்வுக் கூட்டம்
அரியலூர் மாவட்டம் காத்தான்குடிகாடு கிராமத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் உறுப்பு கல்லூரியில் இன்று கல்லூரி புல முதல்வர் செந்தமிழ் செல்வன் தலைமையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில் போதை பொருள் ஒழிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேராசிரியர்கள், மாணவர்கள், மற்றும் காவல்துறையினரைக் கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு குழு அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டு, மேற்கண்ட குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.காமராஜ் அவர்கள் மதுவிலக்கு அமல் பிரிவு அரியலூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர்கணேஷ் கயர்லாபாத் காவல் ஆய்வாளர்.ரவிக்குமார் , கல்லூரி உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
0 Comments