கோயம்புத்தூர் – ஆகஸ்ட் -31,2023
newz – webteam


பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினரை பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் ரயிலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற ஒரு நபரை, அவரிடம் பேசி அவரின் தற்கொலை எண்ணத்தை மாற்றி அவரது உயிரை காப்பாற்றி, குடும்பத்தினரிடம் ஒப்படைத்த கோவில்பாளையம் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பெருமாள் அவரையும்,
கோவில்பாளையம் பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக 600 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபர்களை பிடித்த காவலர் சுரேஷ் அவரையும்,
பீளமேடு அருகே பொதுமக்களை மிரட்டும் வகையில் கத்தி வைத்துக் கொண்டிருந்த நபரை பிடித்து பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அதிரடிப்படையைச் சேர்ந்த காவலர் ரஞ்சித் குமார் அவரையும்…
இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்,இ.கா.ப., மேற்படி காவலர்களின் நற்செயல்களை பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
0 Comments