தூத்துக்குடி – ஆகஸ்ட் – 04,2023
newz – webteam
2023ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரன்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று முதல் 10 இடங்களை பிடித்த மற்றும் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுபணியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி பரிசுத்தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் . எல். பாலாஜி சரவணன் வழங்கினார்.
காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினரின் வாரிசுகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரன்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பிடித்துள்ளவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து அவர்களுக்கு ரூபாய் 7,500/- முதல் ரூபாய் 2,000/- வரை கல்வி பரிசு தொகை வழங்கப்படும். அதேபோன்று காவல்துறையின் வாரிசுகளில் மேல்நிலைப் பள்ளி படிப்பில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்துள்ளவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து அவர்களின் உயர் கல்வி படிப்பு முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித் தொகையாக 25,000/- வரை வழங்கப்படும். அதன்படி 2023ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கான கல்வி பரிசு தொகை மற்றும் 2020- 2021ம் ஆண்டில் மாநில அளவில் மேல்நிலைப் படிப்பில் 100 இடங்களை பிடித்தவர்களுக்கான 2023ம் ஆண்டிற்கான சிறப்பு கல்வி உதவித் தொகை மூன்றாவது மற்றும் நான்காவது தவணையாக காவல்துறையினர் மற்றும் அமைச்சுபணியாளர்களின் வாரிசுகளுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் வழங்கி, அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வாழ்த்தினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், காவல்துறை அமைச்சுப்பணி கண்காணிப்பாளர் மயில்குமார், உதவியாளர் அனிதா கிருஷ்ணகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
0 Comments